Advertisement


சென்னை அணி அசத்தல் வெற்றி: தோனி, வாட்சன் அரைசதம் விளாசல்

ஏப்ரல் 30, 2018.
 Comments [2]  
 


IPL T20 Cricket, Chennai, Delhi, Dhoni
 

புனே: டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் ‘சூறாவளியாக’ சுழன்ற தோனி, 22 பந்தில் 51 ரன்கள் எடுத்தார். 

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 11வது சீசன் தற்போது நடக்கிறது. புனேயில் நடந்த லீக் போட்டியில் தோனியின் சென்னை அணி, டில்லியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ், பீல்டிங் தேர்வு செய்தார்.

நான்கு மாற்றம்: சென்னை அணியில் நேற்று ஒரே நேரத்தில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டன. சாம் பில்லிங்ஸ், இம்ரான் தாகிர், தீபக் சகார், ஷர்துல் தாகூருக்குப் பதில், டுபிளசி, கரண் சர்மா மற்றும் அறிமுக வீரர்களாக லுங்கிடி, கே.எம்.ஆசிப் சேர்க்கப்பட்டனர். 

வாட்சன் அரைசதம்: சென்னை அணிக்கு இம்முறை வாட்சனுடன், டுபிளசி இணைந்து துவக்கம் தந்தார். பிளங்கட் வீசிய 5வது ஓவரில் வாட்சன் 2, டுபிளசி 1 என, 3 சிக்சர் உட்பட 20 ரன்கள் எடுக்கப்பட்டன. டிவாட்யா ஓவரில் இரண்டு சிக்சர் அடித்த வாட்சன், 25வது பந்தில் அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்த நிலையில், டுபிளசி (33 ரன், 33 பந்து) அவுட்டானார். ரெய்னா (1) விரைவில் கிளம்ப, அமித் மிஸ்ரா ‘சுழலில்’, வாட்சன் (78) அவுட்டானார்.


தோனி அபாரம்: அடுத்து வந்த தோனி, பவுல்ட் வீசிய 17வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்சர், ஒரு பவுண்டரி என, ‘சூறாவளியாக’ சுழன்ற அடிக்க, 21 ரன்கள் கிடைத்தன. ராயுடு (41) ரன் அவுட்டாக, தோனி, அரைசதம் எட்டினார். சென்னை அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 211 ரன்கள் குவித்தது. தோனி (51) அவுட்டாகாமல் இருந்தார்.

ரிஷாப் ஆறுதல்: கடின இலக்கைத் துரத்திய டில்லி அணியின் ‘டாப் ஆர்டர்’ அப்படியே சரிந்தது. பிரித்வி (9), முன்ரோ (26) இருவரும், ஆசிப் ‘வேகத்தில்’ சரிந்தனர். ஸ்ரேயாஸ் (13), ரன் அவுட்டாக, மேக்ஸ்வெல் (6) போல்டானார். வந்த வேகத்தில் வாட்சன் ஓவரில், தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த ரிஷாப் பன்ட், ஜடேஜா பந்தையும் சிக்சருக்கு அனுப்பினார். ஆசிப் பந்தில் பவுண்டரி அடித்த இவர், ஐ.பி.எல்., அரங்கில் 5வது அரைசதம் அடித்தார். ரிஷாப், 79 ரன்னுக்கு அவுட்டாக, சென்னை வெற்றி உறுதியானது. 

போராடிய விஜய் ஷங்கர், 28வது பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் 28 ரன் தேவை என்ற நிலையில் 14 ரன்கள் மட்டும் எடுக்கப்பட்டன. டில்லி அணி, 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 198 ரன்கள் மட்டும் எடுத்தது. சென்னை அணி, 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷங்கர் (54), டிவாட்யா (3) அவுட்டாகாமல் இருந்தனர். 

இரண்டாவது அரைசதம்

டில்லி அணிக்கு எதிராக, சென்னை அணி கேப்டன் தோனி, 22 பந்தில் அரைசதம் அடித்தார். இது இவரது இரண்டாவது அதிவேக அரைசதம். இதற்கு முன், 2012ல் மும்பை அணிக்கு எதிராக 20 பந்தில் அரைசதம் அடித்து இருந்தார்.

2வது விக்கெட்

நேற்று ரெய்னாவை போல்டாக்கினார் பஞ்சாப்பின் மேக்ஸ்வெல். இது இவரது இரண்டாவது ஐ.பி.எல்., விக்கெட். இதற்கு முன்பும், ரெய்னாவைத் தான் வீழ்த்தி இருந்தார்.

4வது முறை

ஐ.பி.எல்., 11வது சீசனில் சென்னை அணி இமாலய ரன் குவிப்பை வெளிப்படுத்துகிறது. கோல்கட்டா (205/5), ராஜஸ்தான் (205/5), பெங்களூரு (207/5) அணிகளை தொடர்ந்து, இத்தொடரில் நான்காவது முறையாக 200 ரன்களுக்கும் மேல் எடுத்தது. 

* தவிர, நேற்று டில்லிக்கு எதிராக எடுத்த 211/4 ரன்கள் தான், இந்த சீசனில் சென்னை எடுத்த அதிகபட்ச ஸ்கோர்.

108 மீ.,

டில்லி பவுலர் அவேஷ் கான் வீசிய, 19வது ஓவரின் 6 வது பந்தில் தோனி அடித்த சிக்சர், 108 மீ., துாரத்துக்கு சென்றது. இது இத்தொடரில் அடிக்கப்பட்ட இரண்டாவது நீண்ட சிக்சர். முதலிடத்தில் டிவிலியர்ஸ் (112 மீ.,) உள்ளார். 

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்


Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?