Advertisement


சென்னை அணிக்கு புதிய ரசிகை

ஏப்ரல் 29, 2018.
 Comments  
 


Dhoni, Malti Chahar, IPL T20 Cricket, Chennai Super Kings Fan
 

புனே: சென்னை அணி பங்கேற்கும் போட்டிகளில் அழகான பெண் ஒருவரை ‘கேமரா’ கண்கள் அடிக்கடி வட்டமிடுவதை பார்த்திருக்கலாம். இவரது ஒவ்வொரு அசைவும் போட்டியின் போக்கை உணர்த்துவதாக அமையும். இவர் யார் என புரியாமல் தவித்த ரசிகர்களுக்கு விடை கிடைத்துள்ளது. 

புனேயில் சென்னை, மும்பை அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி நேற்று முன் தினம் நடந்தது. இதில், ஆரம்பத்தில் சென்னை அணிக்கு உற்சாகமாக ஆதரவு அளித்த ரசிகை ஒருவர், கடைசியில் சோகத்தில் ஆழ்ந்தார். இவரது முகமே சென்னை அணியின் சரிவை சொன்னது. இவரது இந்த படங்கள் தான் சமூகவலைதளத்தை ஆக்கிரமித்துள்ளன. இவரது பெயர் மாலதி சகார். சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சகாரின் சகோதரி என்ற விவரம் தெரிய வந்துள்ளது. ‘தல’ தோனியின் தீவிர ரசிகையாம். இதன் காரணமாகவே சென்னை அணி பங்கேற்கும் போட்டிகளை ‘மிஸ்’ செய்யாமல் பார்த்து வருகிறாராம். தோனியுடன் சேர்ந்து ‘போட்டோ’ எடுத்துக் கொண்டுள்ளார். பிரபல ‘மாடலான’ மாலதி, ‘மிஸ் இந்தியா’ அழகி போட்டியிலும் பங்கேற்றுள்ளார். இவரது இன்னொரு சகோதரர் ராகுல் சகாரும் கிரிக்கெட் வீரர் தான். ‘லெக் ஸ்பின்னரான’ இவர், மும்பை அணியில் இடம் பெற்று உள்ளார்.

தோனி குறித்து மாலதி கூறுகையில்,‘‘கேப்டன் ‘கூல்’ தோனியை சந்தித்த தருணம் இனிமையானது. மிகவும் அமைதியானவராகவும் மனதிற்கு பிடித்தவராகவும் காட்சி அளித்தார்,’’என்றார்.

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?