Advertisement


யூத் ஹாக்கி: இந்தியா அபாரம்

ஏப்ரல் 29, 2018.
 Comments  
 


Youth Olympic Games, Hockey Qualification, India
 

பாங்காக்: யூத் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான ஹாக்கி பைனலில் இந்திய அணி, 2–1 என்ற கோல் கணக்கில் ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் மலேசியாவை வீழ்த்தியது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், யூத் ஒலிம்பிக் விளையாட்டுக்கான தகுதிச் சுற்று நடக்கிறது. இதன் ஆண்களுக்கான ஹாக்கி பைனலில், இந்தியா, மலேசியா அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 4–4 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்திருந்தது. கூடுதல் நேரத்திலும் இரு அணியினரால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

இதனையடுத்து போட்டியின் முடிவு ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறைக்கு சென்றது. இதில் இந்திய அணி, 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் வரும் ஆகஸ்ட் மாதம் அர்ஜென்டினாவில் நடக்கவுள்ள யூத் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஹாக்கி அணி தகுதி பெற்றது.

பெண்களுக்கான ஹாக்கி பைனலில் இந்தியா, சீனா அணிகள் மோதின. இதில் இந்திய அணி, 1–4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது.

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?