Advertisement


பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் சாம்பியன்

ஏப்ரல் 29, 2018.
 Comments  
 


Prajnesh Gunneswaran, ATP Challenger Tennis, China
 

அன்னிங்: சீனாவில் நடந்த ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

சீனாவில், ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், எகிப்தின் முகமது சப்வாத் மோதினர். முதல் செட்டை 5–7 என இழந்த பிரஜ்னேஷ், பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 6–3 எனக் கைப்பற்றி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய இவர், 6–1 என வென்றார்.

ஒரு மணி நேரம், 52 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், சென்னையை சேர்ந்த பிரஜ்னேஷ், 5–7, 6–3, 6–1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, ஏ.டி.பி., சாலஞ்சர் ஒற்றையர் பிரிவில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 260வது இடத்தில் உள்ள இவர், ‘டாப்–200’ வரிசையில் இடம் பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?