Advertisement


தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

ஏப்ரல் 17, 2018.
 Comments [3]  
 


Joshna, Dipika Pallikal
 

சென்னை: காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்று, சென்னை திரும்பிய, தமிழக வீரர்களுக்கு, விமான நிலையத்தில், ரசிகர்கள் நேற்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ஆஸ்திரேலியாவின், கோல்டு கோஸ்ட் நகரில், 21வது, காமன்வெல்த் விளையாட்டு நடந்தது. இதில், 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என, மொத்தம், 66 பதக்கங்களுடன், இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த, ஐந்து வீரர்கள், ஒன்பது பதக்கங்களை குவித்தனர்.  ‘காமன்வெல்த் போட்டியில், பதக்கம் வெல்லும், தமிழக, வீரர்– -வீராங்கனையருக்கு, தமிழக அரசு சார்பில், ஊக்கத்தொகையாக, மொத்தம், 2.20 கோடி ரூபாய் வழங்கப்படும்’ என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

பதக்கங்கள் வென்ற, தமிழக ஸ்குவாஷ் நட்சத்திரங்கள் ஜோஷ்னா சின்னப்பா (ஒரு வெள்ளி), தீபிகா கார்த்திக் (2 வெள்ளி), நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம், சென்னை வந்தனர். 

இவர்களுக்கு, வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள், சிறப்பான வரவேற்பு அளித்தனர். டில்லியில் இருந்து, நேற்று மதியம், 12:45 மணிக்கு, சென்னை விமான நிலையம் வந்த, மூன்று பதக்கங்கள் வென்ற, டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமலுக்கு, சங்க நிர்வாகிகள், ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் வரவேற்பு அளித்தனர்.

சரத் கமல் கூறுகையில்,‘‘நான் பெற்ற, மூன்று பதக்கங்களையும், என் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த, பயிற்சியாளர்கள் உட்பட, அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். அடுத்த வாரத்தில், சுவீடனில் நடக்கும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கிறேன். ஆகஸ்ட்டில் நடக்க உள்ள, ஆசிய போட்டியிலும் பங்கேற்கிறேன். இரு போட்டிகளிலும், நிச்சயமாக வெற்றி பெறுவேன்.,’’என்றார்.

திருப்தி

ஜோஷ்னா கூறுகையில்,‘‘ கடந்த 2014ல் கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்றோம். இம்முறை, வெள்ளி கைப்பற்றினாலும் திருப்தியுடன் உள்ளோம். எங்களுக்கு தந்த வரவேற்பு வியப்பை அளித்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டு நடக்கவுள்ளது. இதில் பதக்கம் வெல்வதை இலக்காக வைத்துள்ளோம்,’’ என்றார்.

தீபிகா கூறுகையில்,‘‘ காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளி வென்றதை எண்ணி திருப்தி அடைகிறோம்,’’ என்றார்.

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
m.senthil kumar 7 days ago | Report abuse
என் சகோதர சகோதிரிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் இன்னும் பல சாதனைகள் புரிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஜெய்ஹிந்த்.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Shankar one week ago | Report abuse
வாழ்த்துக்கள்..


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  


Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?