Advertisement


அடுத்து ஆசியா இலக்கு: காமன்வெல்த்தில் ஜொலித்த இந்தியா

ஏப்ரல் 16, 2018.
 Comments  
 


Commonwealth Games 2018, Indian Players
 

புதுடில்லி: காமன்வெல்த்தில் 15 வயது அனிஷ் முதல் 35 வயது மேரி கோம் வரை என, இளமை, அனுபவம் வாய்ந்த இந்திய நட்சத்திரங்கள் பதக்கம் வென்று சாதித்தனர். இது அடுத்து நடக்கவுள்ள ஆசிய விளையாட்டில் ஜொலிக்க உதவியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் விளையாட்டு நடந்தது. இந்தியா சார்பில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள், 66 பதக்கங்களுடன் (26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம்) நாடு திரும்புகின்றனர். மல்யுத்தத்தில் களமிளறங்கிய 12 பேரும் பதக்கங்களுடன் திரும்புவதும் ஸ்பெஷல் தான்.

வழக்கத்துக்கு மாறாக இம்முறை இளம் இந்திய நட்சத்திரங்கள், சர்வதேச அளவில் சவால் கொடுத்து, சாதனைகளுடன் பதக்கம் வென்றனர். டேபிள் டென்னிஸ் போட்டிக்காக கல்லுாரி படிப்பை பாதியில் கைவிட்ட மணிகா பத்ரா, 22, தனிநபர், அணி என, இரு தங்கம் வென்றார்.

ஈட்டி எறிதல் ஜாம்பவான் உவ் ஹார்னுடன் ஜெர்மனியில் தங்கி, பயிற்சியில் ஈடுபட்ட 20 வயது நீரஜ் சோப்ரா, புதிய சாதனையுடன் (86.47 மீ.,), இப்போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று தந்தார்.

சபாஷ் மனு 

பள்ளி நாட்களை முடிக்காத 15 வயது வீரர் அனிஷ். 16 வயது வீராங்கனை மனு பாகர். இருவரும் துப்பாக்கிசுடுதலில் தங்கம் கைப்பற்றினர். இதில் மனு பாகர், துவக்கத்தில் டென்னிஸ், குத்துச்சண்டையில் பங்கேற்று பதக்கங்கள் வாங்கியுள்ளார்.

சமீபத்திய ‘ஜூனியர்’ உலக கோப்பையில் சாதித்த இவர், தனது ‘சீனியர்’ ஹீனா சித்துவை பின் தள்ளி, காமன்வெல்த் தங்கம் வென்றதை மறக்க முடியாது.

‘ஓல்டு’, ‘கோல்டு’

கடந்த 2014க்குப் பின் சர்வதேச போட்டிகளில் சரியாக பங்கேற்காதவர் மல்யுத்த வீரர், ‘சீனியர்’ சுஷில் குமார், 34. இதேபோல, 3 குழந்தைகளுக்கு அம்மா, அரசியல் பாதை என, தடம் மாறியவர் குத்துச்சண்டை நட்சத்திரம் மேரி கோம், 35. இருவரும் சிறப்பான முறையில் செயல்பட்டு, தங்கம் கைப்பற்றினர். தவிர, தன் மீதான விமர்சனங்களுக்கு தக்க பதிலடி தந்துள்ளார் சுஷில் குமார்.

இப்படி, இளமை மற்றும் அனுபவம் இணைந்து இம்முறை பதக்க மழை பொழிந்தது, அடுத்து வரும் ஜகார்த்தா (இந்தோனேஷியா) ஆசிய விளையாட்டில் (ஆக., 18 முதல், செப்., 2 வரை) இந்தியா சாதிக்க உதவும் என, நம்பப்படுகிறது.

500வது பதக்கம்

ஸ்குவாஷ் இரட்டையரில் தமிழகத்தின் தீபிகா பல்லீகல், ஜோஷ்னா ஜோடி, வெள்ளி வென்றது. இது, காமன்வெல்த் வரலாற்றில் இந்தியா வென்ற 500வது பதக்கமாக அமைந்தது.

15, 16, 17... வயதில்

கோல்டு கோஸ்ட் காமன்வெல்த்தில் இந்தியாவின் 15 வயது அனிஷ் முதல், மனு, 16, மெகுலி, 17, சாத்விக், 17, தீபக், 18, நமன் தன்வார், 19, நீரஜ் சோப்ரா, 20, வெங்கட், 21, சிந்து, 22, மணிஷ், 22, அமித், 22, மணிகா, 22, மிதர்வால், 22, பூணம் யாதவ், 22, மீராபாய், 23, பர்தீப் சிங், 23, விகாஷ் தாகூர், 23, வினேஷ் போகத், 23, என, இளம் படையினர் பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்றனர்.

இளம் நட்சத்திரங்களின் இந்த சாதனை, எதிர்கால இந்திய விளையாட்டு, பாதுகாப்பான கைகளில் உள்ளதை உணர்த்துகிறது.

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?