Advertisement


யூகி பாம்ப்ரி முன்னேற்றம்

ஏப்ரல் 16, 2018.
 Comments  
 


Yuki Bhambri, ATP Tennis Ranking
 

புதுடில்லி: ஏ.டி.பி., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்திய வீரர் யூகி பாம்ப்ரி, முதன்முறையாக 83வது இடத்துக்கு முன்னேறினார்.

டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது. இதில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, 105வது இடத்தில் இருந்து, முதன்முறையாக 83வது இடம் பிடித்தார். இவர், சமீபத்தில் முடிந்த சீனதைபே சாலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றார். இதன்மூலம், பிப். 2016க்கு பின், தரவரிசையில் ‘டாப்–100’ பட்டியலில் இடம் பிடித்தார். கடந்த ஜூலை 2011ல், சோம்தேவ் தேவ்வர்மன், 62வது இடம் பிடித்திருந்தது இந்திய வீரர் ஒருவரின் சிறந்த தரவரிசையாக உள்ளது.

சீனதைபே சாலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பைனல் வரை சென்ற மற்றொரு இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், 17 இடங்கள் முன்னேறி, முதன்முறையாக 116வது இடம் பிடித்தார்.

இரட்டையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் திவிஜ் சரண், 41வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் லியாண்டர் பயஸ், 49வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ரோகன் போபண்ணா, 19வது இடத்தில் நீடிக்கிறார்.

பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., இரட்டையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்சா, 24வது இடத்தில் தொடர்கிறார். ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, முதன்முறையாக 194வது இடம் பிடித்தார்.

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?