Advertisement


சென்னையை புரட்டிய கெய்ல் ‘புயல்’: அஷ்வின் அணிக்கு ‘திரில்’ வெற்றி

ஏப்ரல் 15, 2018.
 Comments  
 


dhoni
 

மொகாலி: சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கடைசி ஓவரில் அசத்திய பஞ்சாப் அணி, 4 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய கெய்ல், 22 பந்தில் அரைசதம் கடந்தார். பொறுப்பாக ஆடிய தோனியின் அரைசதம் வீணானது.

இந்தியாவில், 11வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. நேற்று, மொகாலியில் நடந்த 12வது லீக் போட்டியில் பஞ்சாப், சென்னை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

கெய்ல் அசத்தல்

பஞ்சாப் அணிக்கு லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. சகார் வீசிய 6வது ஓவரில், 2 பவுண்டரி, 2 சிக்சர் பறக்கவிட்ட கெய்ல், இம்ரான் தாகிர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, 22 பந்தில் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்திருந்த போது ஹர்பஜன் ‘சுழலில்’ ராகுல் (37) சிக்கினார். அபாரமாக ஆடிய கெய்ல், 33 பந்தில் 63 ரன் (4 சிக்சர், 7 பவுண்டரி) எடுத்து வாட்சனிடம் சரணடைந்தார். மயங்க் அகர்வால் (30) ஓரளவு கைகொடுத்தார். ஆரோன் பின்ச் (0) ஏமாற்றினார். யுவராஜ் (20), கேப்டன் அஷ்வின் (14) நிலைக்கவில்லை. கருண் நாயர் (29) ஆறுதல் தந்தார்.

பஞ்சாப் அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 197 ரன்கள் எடுத்தது. ஆன்ட்ரூ டை (3) அவுட்டாகாமல் இருந்தார். சென்னை அணி சார்பில் ஷர்துல் தாகூர், இம்ரான் தாகிர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

தோனி அரைசதம்

சவாலான இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு வாட்சன் (11), முரளி விஜய் (12) சுமாரான துவக்கம் தந்தனர். அஷ்வின் ‘சுழலில்’ பில்லிங்ஸ் (9) சிக்கினார். பொறுப்பாக ஆடிய அம்பதி ராயுடு (49), ‘ரன்–அவுட்’ ஆனார். மோகித் சர்மா வீசிய 18வது ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த தோனி, அரைசதமடித்தார். ரவிந்திர ஜடேஜா (19) நிலைக்கவில்லை.

தொடர்ந்து அசத்திய தோனி, ஆன்ட்ரூ டை வீசிய 19வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டது. மோகித் வீசிய 20வது ஓவரில், ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 12 ரன் மட்டுமே கிடைத்தது. சென்னை அணி, 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு, 193 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. தோனி (79), பிராவோ (1) அவுட்டாகாமல் இருந்தனர். 

ஆட்ட நாயகன் விருதை கெய்ல் வென்றார்.

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?