Advertisement


சபாஷ் இந்தியா: காமன்வெல்த்தில் ‘66’ பதக்கம்

ஏப்ரல் 15, 2018.
 Comments  
 


Saina Nehwal
 
கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் விளையாட்டில், இம்முறை இந்தியா 26 தங்கம் உட்பட மொத்தம் 66 பதக்கம் வென்று, பதக்கப்பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது. கடைசி நாளில் பாட்மின்டன் வீராங்கனை செய்னா, தங்கம் வென்று அசத்தினார். 

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் விளையாட்டு நடந்தது. இதன் பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் செய்னா, சக வீராங்கனை சிந்துவை எதிர் கொண்டார். முதல் செட்டை 21–18 என கைப்பற்றிய செய்னா, அடுத்த செட்டையும் 23–21 என வசப்படுத்தினார். முடிவில், செய்னா 21–18, 23–21 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், இம்முறை இரண்டாவது தங்கத்தை வசப்படுத்தினார்.

ஏற்கனவே, அணிகளுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றிருந்தார். காமன்வெல்த் அரங்கில், 2010ம் ஆண்டுக்குப்பின் (டில்லி) இரண்டாவது முறையாக ஒற்றையரில் தங்கம் கைப்பற்றினார். 

சிந்துவை பொறுத்தவரை, காமன்வெல்த் விளையாட்டு ஒற்றையர் பிரிவில் முதல் முறையாக வெள்ளி வென்றார்.  

ஸ்ரீகாந்த் அசத்தல்

ஆண்கள் பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21–19, 14–21, 14–21 என மலேசியாவின் லீ வெய் சாங்கிடம் வீழ்ந்து வெள்ளி வென்றார். 

ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சாட்விக், சிராக் ஜோடி 13–21, 16–21 என்ற நேர் செட் கணக்கில் இங்கிலாந்தின் மார்கஸ், கிறிஸ் ஜோடியிடம் தோல்வியடைந்து வெள்ளி கைப்பற்றியது.

தீபிகா ஜோடிக்கு வெள்ளி

பெண்கள் இரட்டையர் ஸ்குவாஷ் பிரிவு பைனலில் இந்தியாவின் ஜோஷ்னா, தீபிகா ஜோடி 9–11, 8–11 என நியூசிலாந்தின் ஜோலியா, அமானந்த் ஜோடியிடம் வீழ்ந்து வெள்ளி வென்றது.

சத்யன் ஜோடி அபாரம்

டேபிள் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்யன், மணிகா ஜோடி 3–0 என சக ஜோடியான சரத் கமல், மவுமா தாசை வீழ்த்தி, வெண்கலம் கைப்பற்றியது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல் 4–1 என இங்கிலாந்தின் சாமுவேல் வால்க்கைர வீழ்த்தி, வெண்கலம் வென்றார்.

மூன்றாவது அதிகபட்சம்

நேற்றைய கடைசி நாளில் மட்டும் இந்தியாவுக்கு ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்கள் கிடைத்தன. 11 நாள் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா சார்பில் 15 போட்டிகளில் 218 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கத்துடன் மூன்றாவது இடம் பிடித்தது. முதலிரண்டு இடங்களை முறையே ஆஸ்திரேலியா (198), இங்கிலாந்து (136) பிடித்தன.

மூன்றாவது சிறந்தது

காமன்வெல்த் வரலாற்றில், டில்லி போட்டியில்(2010) தான் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. அப்போது, 38 தங்கம் உட்பட 101 பதக்கங்களுடன் இரண்டாவது இடம் பிடித்தது. அடுத்து, மான்செஸ்டர் போட்டியில் (2002) 30 தங்கம் உட்பட 69 பதக்கத்துடன் நான்காவது இடம் பெற்றது. கோல்டு கோஸ்ட் போட்டியில் 26 தங்கம் உட்பட 66 பதக்கங்கள் வென்றுள்ளது. இது, பதக்க அடிப்படையில், இந்தியாவின் மூன்றாவது சிறந்த செயல்பாடாக அமைந்தது.

முன்னேற்றம்

கடந்த முறை கிளாஸ்கோ போட்டியில்(2014), இந்தியா, 15 தங்கம் உட்பட 64 பதங்கங்களுடன் ஐந்தாவது இடம் பிடித்தது. தற்போது 26 தங்கத்துடன் இரண்டு இடங்கள் முன்னேறி, மூன்றாவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு அனுபவ, இளம் நட்சத்திரங்கள் இணைந்து அசத்தியது தான் முக்கிய காரணம். துப்பாக்கி சுடுதலில் ‘டீன் ஏஜ்’ நட்சத்திரங்களான மனு பாகர், அனிஷ் தங்கம் வென்றனர். இதே போல மல்யுத்தத்தில் சுஷில் குமார்,34, குத்துச்சண்டையில் மேரி கோம், 35, தங்கம் வென்று சாதித்தனர்.

பாட்மின்டனில் அதிகம்

இம்முறை பாட்மின்டனில் இரண்டு தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் இந்தியாவுக்கு 6 பதக்கம் கிடைத்துள்ளது. இதன் மூலம், காமன்வெல்த் பாட்மின்டனில் இந்தியா அதிகபட்ச பதக்கத்தை வசப்படுத்தியது. இதற்கு முன், கடந்த இரண்டு முறையும் (2010– டில்லி, 2014– கிளாஸ்கோ) நான்கு பதக்கமே வென்றிருந்தது.

அடுத்து எங்கே

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் அடுத்த (2022, ஜூலை 27–ஆக.7) காமன்வெல்த் விளையாட்டு நடக்கவுள்ளது. 

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?