Advertisement


கோல்கட்டா அணி 2வது தோல்வி

ஏப்ரல் 14, 2018.
 Comments  
 


Chris Lynn
 

கோல்கட்டா: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஏமாற்றிய கோல்கட்டா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. 

கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா, ஐதராபாத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். முதலில் ‘பேட்’ செய்த கோல்கட்டா அணிக்கு ராபின் உத்தப்பா (3) ஏமாற்றினார். கோல்கட்டா அணி, 7 ஓவரில், 52/1 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட போட்டி சிறிது நேரம் தடைபட்டது. மீண்டும் போட்டி துவங்கியதும், நிதிஷ் ராணா (18), ஆன்ட்ரி ரசல் (9) அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய கிறிஸ் லின் (49) அரைசத வாய்ப்பை இழந்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் (29) ஓரளவு கைகொடுத்தார். கோல்கட்டா அணி, 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு, 138 ரன்கள் எடுத்தது. மிட்சல் ஜான்சன் (4) அவுட்டாகாமல் இருந்தார். ஐதராபாத் அணி சார்பில் புவனேஷ்வர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

வில்லியம்சன் அரை சதம் 

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு விரிதிமன் சகா (24) நல்ல துவக்கம் தந்தார். ஷிகர் தவான் (7) ஏமாற்றினார். குல்தீப் ‘சுழலில்’ மணிஷ் பாண்டே (4) சிக்கினார். சாகிப் 27 ரன்களில் திரும்பினார். அபாரமாக விளையாடிய கேப்டன் வில்லியம்சன் (50) அரை சதம் எட்டினார். யூசுப் பதான் ஒரு சிக்சர் அடிக்க, ஐதராபாத் அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. யூசுப் பதான் (17), தீபக் ஹூடா (5) அவுட்டாகாமல் இருந்தனர். ஏற்கனவே, சென்னையிடம் வீழ்ந்த கோல்கட்டா அணி நேற்று இரண்டாவது தோல்வி அடைந்தது. 

 

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?