Advertisement


சென்னைக்கு கிடைக்குமா ‘ஹாட்ரிக்’: அஷ்வின் அணியுடன் மோதல்

ஏப்ரல் 14, 2018.
 Comments  
 


dhoni
 

மொகாலி: ஐ.பி.எல்., தொடரில் இன்றைய லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, அஷ்வினின் பஞ்சாப் அணியை எதிர் கொள்கிறது. இதில் சென்னை அணி அசத்தும் பட்சத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்யலாம்.

இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., ‘சீசன்’ நடக்கிறது. இன்று மொகாலியில் நடக்கும் லீக் போட்டியில் பஞ்சாப், சென்னை அணிகள் மோதுகின்றன. இரண்டு ஆண்டுக்குப்பின், பங்கேற்றுள்ள சென்னை அணி, முதல் இரு போட்டிகளில் வென்று அசத்தியது.

கடந்த முறை வாட்சன், அம்பதி ராயுடு ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. இருப்பினும், ரெய்னா காயத்தால் அவதிப்படுவதால், இன்று முரளி விஜய் துவக்கம் தருவார் என நம்பலாம். ராயுடு ‘மிடில்–ஆர்டரில்’ களமிறங்கலாம்.

கேப்டன் தோனி, புதிய ‘ஹீரோவாக’ உருவெடுத்துள்ள சாம் பில்லிங்ஸ், டுவைன் பிராவோ என, பின் வரிசையில் கைகொடுக்க பலர் காத்திருக்கின்றனர். பவுலிங்கை பொறுத்தவரையில் ஹர்பஜன், ஜடேஜா, தாகிர் என மூன்று அனுபவ ‘சுழல்’ வீரர்கள் இருந்தும் பிரகாசிக்கவில்லை. ‘வேகத்தில்’ நம்பிக்கை தரும் வாட்சனுடன், சகார் பங்களிப்பு கிடைப்பது அவசியம். 

மிரட்டும் ராகுல்

பஞ்சாப் அணி இரு போட்டியில் தலா ஒரு வெற்றி, தோல்வி அடைந்தது. துவக்க வீரர் லோகேஷ் ராகுல் 14 பந்தில் அரை சதம் அடித்து, மிரட்டுகிறார். மயங்க் அகர்வால், பின்ச், யுவராஜ் சிங் என மற்றவர்கள் ஜொலிக்கவில்லை.

கருண் நாயர், மில்லர், ஸ்டாய்னிஸ் பொறுப்புடன் செயல்படுவது ஆறுதலான விஷயம். கேப்டன் அஷ்வின் பேட்டிங்கில் கைகொடுத்து நம்பிக்கை அளிக்கிறார். சுழற்பந்துவீச்சில் அக்சர் படேல், அஷ்வினுடன், 17 வயது வீரர் முஜிப் ரஹ்மான் அசத்துகிறார்.

இதுவரை 10 சீசனில் தோனி அணியில் இருந்த அஷ்வின், முதன் முறையாக இவரை எதிர்த்து கேப்டனாக களமிறங்குகிறார். இதனால் இவர்களுக்கு இடையிலான மோதல், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோகத்தில் லுங்கிடி

தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் லுங்கிடி, 22. சென்னை அணியில் (ரூ. 50 லட்சம்) உள்ளார். முதலிரண்டு போட்டியில் களமிறங்கவில்லை. இவரது தந்தை ஜெரோமி நிகிடி மரணம் காரணமாக, லுங்கிடி உடனடியாக நாடு திரும்புகிறார். ஜெரோமியின் மறைவுக்கு தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு இரங்கல் தெரிவித்துள்ளது.

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?