Advertisement


டில்லி அணிக்கு முதல் வெற்றி: ஜேசன் ராய் விளாசல்

ஏப்ரல் 14, 2018.
 Comments  
 


jason
 

மும்பை: மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஜேசன் ராய் 91 ரன்கள் விளாச, டில்லி அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 11வது சீசன், நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த 9வது லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை, டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் காம்பிர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

சூர்யகுமார் அரைசதம்

மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ், எவின் லீவிஸ் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்திருந்த போது லீவிஸ் (48) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய சூர்யகுமார் (53), அரைசதமடித்தார். இஷான் கிஷான் (44) ஓரளவு கைகொடுத்தார். போலார்டு (0), கேப்டன் ரோகித் (18), குர்னால் பாண்ட்யா (11), ஹர்திக் பாண்ட்யா (2) சோபிக்கவில்லை.

மும்பை அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 194 ரன்கள் குவித்தது. தனஞ்செயா (4), மார்கண்டே (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஜேசன் அபாரம்

சவாலான இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு கேப்டன் காம்பிர் (15) சுமாரான துவக்கம் தந்தார். ஹர்திக் பாண்ட்யா வீசிய 4வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ராய், 27 பந்தில் அரைசதம் கடந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய ரிஷாப் பன்ட் (47 ரன், 25 பந்து, 2 சிக்சர், 6 பவுண்டரி) நம்பிக்கை அளித்தார். மேக்ஸ்வெல் (13) நிலைக்கவில்லை.

‘திரில்’ வெற்றி

கடைசி ஓவரில் டில்லிக்கு 11 ரன் தேவைப்பட்டது. முஸ்தபிஜுர் வீசிய 20வது ஓவரின் முதலிரண்டு பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ஜேசன் ராய், அடுத்த 3 பந்துகளை கோட்டைவிட்டார். இதனால் 6வது பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. கடைசி பந்தை துாக்கி அடித்து, ஒரு ரன் எடுத்த ஜேசன், வெற்றியை உறுதி செய்தார்.

டில்லி அணி, 20 ஓவரில், 3 விக்கெட்டுக்கு, 195 ரன்கள் எடுத்து, இத்தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. ஜேசன் ராய் (91), ஸ்ரேயாஸ் (27) அவுட்டாகாமல் இருந்தனர். ஏற்கனவே சென்னை, ஐதராபாத் அணிகளிடம் வீழ்ந்த மும்பை அணி, ‘ஹாட்ரிக்’ தோல்வியடைந்தது.

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?