Advertisement


டேபிள் டென்னிஸ்: மணிகா பத்ரா சாதனை

ஏப்ரல் 14, 2018.
 Comments  
 


Manika Batra wins the table tennis women singles gold, Commonwelth game
 

 கோல்டுகோஸ்ட்: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் வரலாற்றில், பெண்கள் ஒற்றையரில் தங்கம் வென்று சாதித்தார் இந்தியாவின் மணிகா பத்ரா. 

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில், காமன்வெல்த் போட்டி நடக்கிறது. இதன், அரையிறுதியில் இந்தியாவின் மணிகா பத்ரா, சிங்கப்பூரின் பெங்கை 4–3 என, வென்று, பைனலுக்கு முன்னேறினார். 

இதில் மற்றொரு சிங்கப்பூர் வீராங்கனை மெங்கு யுவை சந்தித்தார். சிறப்பாக செயல்பட்ட மணிகா பத்ரா, 4–0 என, வென்றார். இதையடுத்து, காமன்வெல்த் டேபிள் டென்னிஸ், பெண்கள் ஒற்றையரில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என, சாதனை படைத்தார்.

மூன்றாவது பதக்கம்

கோல்டுகோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் மணிகா வென்ற மூன்றாவது பதக்கம் இது. இதற்கு முன் இந்திய அணிக்காக தங்கம், பெண்கள் இரட்டையரில் வெள்ளி வென்றிருந்தார். 

சரத்கமல் வெள்ளி

ஆண்கள் இரட்டையர் டேபிள் டென்னிஸ், பைனலில் வீழ்ந்த இந்தியாவின் சரத்கமல், சத்யன் ஜோடிக்கு, வெள்ளி கிடைத்தது. ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் ஹர்மீத், ஷங்கர் ஜோடி வெண்கலப்பதக்கம் கைப்பற்றியது.

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?