கோல்டுகோஸ்ட்: காமன்வெல்த் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் நீரஜ் சோப்ரா.
ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில், காமன்வெல்த் போட்டி நடக்கிறது. இதன் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் பைனல் நடந்தது. இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, விபின் கசானா களமிறங்கினர்.
இதன் நான்காவது வாய்ப்பில், நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 86.47 மீ., துாரம் எறிய, ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற, முதல் இந்தியர் என, வரலாறு படைத்தார். தவிர, காமன்வெல்த் தடகளத்தில், மில்கா சிங் (400 மீ.,), பெண்கள் தொடர் ஓட்டம் (4*400 மீ.,), கிருஷ்ண பூனியா, விகாஷ் கவுடாவுக்குப் (வட்டு எறிதல்) பின், தங்கம் வென்ற 5வது நட்சத்திரம் ஆனார்.
விபின் கசானாவுக்கு (77.87 மீ.,) ஐந்தாவது இடம் தான் கிடைத்தது.