Advertisement


மேரி கோம் ‘தங்கம்’: காமன்வெல்த்தில் பதக்க மழை

ஏப்ரல் 14, 2018.
 Comments [1]  
 


Mary Kom has just won the GOLD in her boxing category on her Commonwealth Games debut
 

 கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் பெண்கள் குத்துச்சண்டையில் இந்தியாவின் மேரி கோம் தங்கம் வென்றார். ஆண்கள் பிரிவில் கவுரவ் சோலங்கி தங்கம் கைப்பற்றினார். 

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் விளையாட்டு நடக்கிறது. இதில் இன்று நடந்த பெண்களுக்கான ‘லைட் பிளை வெயிட்’ (45–48 கி.கி.,) பிரிவு குத்துச்சண்டை பைனலில், இந்தியாவின் மேரி கோம், வடக்கு அயர்லாந்தின் கிறிஸ்டினாவை 5–0 என, வென்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இவர், காமன்வெல்த்தில் வென்ற முதல் பதக்கமாக இது அமைந்தது. 

கவுரவ் அபாரம்

ஆண்கள் ‘பிளைவெயிட்’ (52 கி.கி.,) குத்துசண்டையில் இந்தியாவின் கவுரவ் சோலங்கி, வடக்கு அயர்லாந்தின் இர்வினை 4–1 என்ற கணக்கில் சாய்த்து, தங்கப்பதக்கம் வென்றார். ஆண்கள் ‘மிடில் வெயிட்’ (75 கி.கி.,) பிரிவு பைனலில் விகாஷ் கிருஷ்ணன், வில்பிரட்டை (காமரூன்) வீழ்த்தி, தங்கம் கைப்பற்றினார். 

‘லைட் பிளை வெயிட்’ (49 கி.கி.,) பிரிவு பைனலில் அமித் பங்கல் (1–3), இங்கிலாந்தின் கலாலிடம் வீழ்ந்து, வெள்ளி கைப்பற்றினார். ‘லைட் வெயிட்’ (50 கி.கி.,) பிரிவில் மனிஷ் கவுஷிக், ஹாரியிடம் (ஆஸி.,) தோற்க, வெள்ளி மட்டும் கிடைத்தது. 

சஞ்சீவ் அசத்தல்

ஆண்களுக்கான 50 மீ., ‘ரைபிள் 3 பொசிசன்ஸ்’ துப்பாக்கிசுடுதலில் அசத்திய இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட், 454.5 புள்ளி பெற்று, காமன்வெல்த் சாதனையுடன் தங்கம் வென்றார். செயின் சிங் (419.1) 5வது இடம் தான் பிடித்தார்.

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
kannaiya srinivasan 2 weeks ago | Report abuse
தங்க பதக்க மழை மாதிரி இங்கே காவேரி பக்கம் கொஞ்சம் மழை பெய்ததால் தமிழர்கள் மனம்குளிரும்...




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?