Advertisement


டிவிலியர்ஸ் அரைசதம்: பெங்களூரு வெற்றி

ஏப்ரல் 13, 2018.
 Comments  
 


IPL T20 Cricket, Bangaluru, Punjab
 

பெங்களூரு: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், டிவிலியர்ஸ் அரைசதம் கடந்து கைகொடுக்க பெங்களூரு அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில், 11வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த 8வது லீக் போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

உமேஷ் அசத்தல்: பஞ்சாப் அணிக்கு லோகேஷ் ராகுல் அதிரடி துவக்கம் தந்தார். இவர், வோக்ஸ் வீசிய முதல் ஓவரில், 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். ஆட்டத்தின் 4வது ஓவரை வீசிய உமேஷ் யாதவ், மயங்க் அகர்வால் (15), ஆரோன் பின்ச் (0), யுவராஜ் சிங் (4) ஆகியோரை அவுட்டாக்கினார். அபாரமாக ஆடிய ராகுல், 47 ரன் (30 பந்து) எடுத்திருந்த போது வாஷிங்டன் சுந்தர் ‘சுழலில்’ சிக்கினார். கருண் நாயர் (29), கேப்டன் அஷ்வின் (33) ஓரளவு கைகொடுத்தனர்.

பஞ்சாப் அணி, 19.2 ஓவரில், 155 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. மோகித் சர்மா (1) அவுட்டாகாமல் இருந்தார். பெங்களூரு அணி சார்பில் உமேஷ் யாதவ், 3 விக்கெட் கைப்பற்றினார்.

டிவிலியர்ஸ் அபாரம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு பிரண்டன் மெக்கலம் (0) ஏமாற்றினார். கேப்டன் கோஹ்லி (21) நிலைக்கவில்லை. பின் இணைந்த குயின்டன் டி காக், டிவிலியர்ஸ் ஜோடி பொறுப்பாக ஆடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்திருந்த போது அஷ்வின் ‘சுழலில்’ குயின்டன் (45) போல்டானார். சர்பராஸ் கான், ‘டக்–அவுட்’ ஆனார்.

முஜீப் ஜத்ரன் வீசிய 17வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் அடித்த டிவிலியர்ஸ், மோகித் சர்மா பந்தை சிக்சருக்கு அனுப்பி, 36 பந்தில் அரைசதம் கடந்தார். இவர், 57 ரன் (40 பந்து) எடுத்திருந்த போது, ஆன்ட்ரூ டை ‘வேகத்தில்’ வெளியேறினார். மன்தீப் சிங் (22) ‘ரன்–அவுட்’ ஆனார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது. மோகித் சர்மா வீசிய 20வது ஓவரில், 2 பவுண்டரி அடித்த வாஷிங்டன் சுந்தர் வெற்றியை உறுதி செய்தார். பெங்களூரு அணி, 19.3 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் (9), வோக்ஸ் (1) அவுட்டாகாமல் இருந்தனர். பஞ்சாப் அணி சார்பில் அஷ்வின், 2 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement

ஹைதராபாத் vs சென்னை , போட்டி 20
இந்திய பிரீமியர் லீக், 2018
4/22/2018 , 16:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?