Advertisement


கடைசி பந்தில் வீழ்ந்தது மும்பை

ஏப்ரல் 12, 2018.
 Comments  
 


IPL T20 Cricket, Mumabi, Hyderabad, Pollard
 
ஐதராபாத்: ஐ.பி.எல்., லீக் போட்டியில், ஐதராபாத்தின் ஸ்டான்லேக், கடைசி பந்தில் பவுண்டரி அடிக்க, மும்பை அணி, 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. 

இந்தியாவில் 11வது சீசன் ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை, ஐதராபாத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன், பீல்டிங் தேர்வு செய்தார்.

மும்பை அணியில் ஹர்திக் பாண்ட்யா ஓய்வு தரப்பட்டது. ஐதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார் இடம் பெறவில்லை.

லீவிஸ் ஆறுதல்: மும்பை அணிக்கு ரோகித் (11), லீவிஸ் ஜோடி சுமரான துவக்கம் தந்தது. இஷான் கிஷான் (9), லீவிஸ் (29), நீடிக்கவில்லை. குர்னால் பாண்ட்யா (15), சாகிப் ‘சுழல்’ சரணடைந்தார். போலார்டு (28), சூர்ய குமார் (28) சற்று உதவினர். மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 147 ரன்கள் மட்டும் எடுத்தது. மார்க்கண்டே (6), பும்ரா (4) அவுட்டாகாமல் இருந்தனர். 

தவான் விளாசல்: எளிய இலக்கைத் துரத்திய ஐதராபாத் அணி, 6.4 ஓவரில் 62/0 ரன்கள் குவித்தது. இதன் பின் சகா (22), வில்லியம்சன் (6), 45 ரன்கள் எடுத்த தவான், மணிஷ் பாண்டே (11) என, வரிசையாக வெளியேற, 89 ரன்னுக்கு 4 விக்., ரன் என, தடுமாறியது. சாகிப் (12) போல்டானார். 

17.3 ஓவரில் 136/5 என, இருந்த ஐதராபாத் அணியின் வெற்றிக்கு, 15 பந்தில் 12 ரன் தேவைப்பட்டது. இந்நிலையில், பும்ரா ஓவரில் யூசுப் பதான் (14), ரஷித் கான் (0) அவுட்டாகினர். முஷ்தபிஜுர் வீசிய 19 வது ஓவரில் சித்தார்த் (0), சந்தீப் (0) அவுட்டாக, கடைசி ஓவரில் 11 ரன் தேவைப்பட்டன.

‘திரில்’ வெற்றி: கட்டிங் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில், ஹூடா சிக்சர் அடித்தார். அடுத்த 2 பந்தில், ‘வைடு’ உட்பட 2 ரன் வந்தன. 4, 5வது பந்தில் ஸ்டான்லேக், ஹூடா தலா 1 ரன் எடுத்தனர். கடைசி பந்தில் ஸ்டான்லேக் ஒரு பவுண்டரி அடிக்க, ஐதராபாத் அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து, 1 விக்கெட்டில் ‘திரில்’ வெற்றி பெற்றது. ஹூடா (32), ஸ்டான்லேக் (5) அவுட்டாகாமல் இருந்தனர். 

மும்பை சார்பில், ‘சுழல்’ வீரர் மார்க்கண்டே, 4 விக்கெட் வீழ்த்தினார். முதல் போட்டியில் சென்னையிடம் வீழ்ந்த மும்பை அணி, இத்தொடரில் இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது.

Advertisement

ஹைதராபாத் vs சென்னை , போட்டி 20
இந்திய பிரீமியர் லீக், 2018
4/22/2018 , 16:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?