Advertisement


மீண்டும் சந்திப்போம்: சென்னை வீரர்கள் சோகம்

ஏப்ரல் 12, 2018.
 Comments  
 


IPL T20 Cricket, Chennai Super Kings, Raina, Dhoni, Bravo
 

புனே: சென்னை அணி போட்டிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டதால், வீரர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். 

ஐ.பி.எல்., தொடரின் வெற்றிகரமான அணி சென்னை. சொந்தமண்ணில் அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாது. இங்கு விளையாடிய 48 போட்டிகளில், 34ல் வென்றுள்ளது (70.8 சதவீதம்). கடந்த 2011 தொடரில் பைனல் உட்பட, சேப்பாக்கம் மைதானத்தில் பங்கேற்ற 8 போட்டிகளிலும் வென்று சாதித்தது. 

இந்நிலையில், இரு ஆண்டு தடைக்குப் பின், மீண்டும் சொந்தமண்ணில் களமிறங்கியது சென்னை அணி. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் களமிறங்கிய முதல் போட்டியில் வென்று அசத்தியது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக, மீதமுள்ள 6 போட்டிகள், புனேக்கு மாற்றப்பட்டது. 

இதையடுத்து, சென்னை அணி வீரர்கள், மும்பை கிளம்பிச்சென்றனர். வரும் 2019ல், பார்லிமென்ட் தேர்தல் நடக்கும் என்பதால், மீண்டும் சொந்தமண்ணில் முழுமையாக விளையாட முடியுமா எனத் தெரியவில்லை. இதனிடையே, இடம் மாற்றம் குறித்து, சென்னை வீரர்கள் சோகத்தில் உள்ளனர். இதுகுறித்து வீரர்கள் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தி:

* ரெய்னா: எங்களது சென்னை ரசிகர்களுக்காக, சொந்தமண்ணில் விளையாட முடியாமல் போய்விட்டது. தற்போது புனே சென்றாலும், நீங்கள் எங்கள் இதயங்களில் என்றும் இருக்கின்றீர்கள்.

* டுபிளசி: சென்னையை விட்டு கிளம்பிச் செல்வது, மீண்டும் இந்த சீசனில் இங்கு விளையாட முடியாதது, சோகமாக உள்ளது. 

* இம்ரான் தாகிர்: சென்னையில் எங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. தற்போது, இங்கிருந்து சென்றது மிகுந்த சோகம் தான். எல்லாம் நல்லவிதமாக முடிந்து, அடுத்த சீசனில் இங்கு வருவோம் என நம்புகிறேன்.

* ஹர்பஜன் சிங்: சென்னையில் விளையாட முடியாமல் போனதால் மனம் உடைந்தது. பிறமண்ணில் களம் கண்டாலும், தமிழ் பாசமும், நேசமும் துளியும் குறையாது. மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் தமிழக ரசிகர்களிடம் இருந்து விடை பெறுகிறேன்.

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?