Advertisement


ஸ்ரீகாந்த் ‘நம்பர்–1’ : உலக பாட்மின்டன் தரவரிசையில்...

ஏப்ரல் 12, 2018.
 Comments  
 


Srikanth Kidambi, India, Badminton, Ranking, Number One
 

புதுடில்லி: சர்வதேச பாட்மின்டன் தரவரிசையில் ‘நம்பர்–1’ இடம் பிடித்து, புதிய வரலாறு படைத்தார் இந்தியாவின் ஸ்ரீகாந்த்.

இந்திய பாட்மின்டன் வீரர் ஸ்ரீகாந்த், 25. கடந்த 2017ல் இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ் என, 2017ல் மட்டும் நான்கு சூப்பர் சீரிஸ் கோப்பை வென்றார். உலகத் தரவரிசையில் ‘நம்பர்–2’ இடத்தில் இருந்தார் ஸ்ரீகாந்த் (76,895 புள்ளி).

புதிய தரவரிசை பட்டியல் வெளியானது. முதலிடத்தில் இருந்த டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சென் (75,470), இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து, இந்தியாவின் ஸ்ரீகாந்த், ‘நம்பர்–1’ இடம் பெற்றார். தவிர, நவீன பாட்மின்டன் தரவரிசையில், இந்த இலக்கை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். 

புள்ளிகள் கணிணி மயமாக்கப்படும் முன், கடந்த 1980ல் இந்தியாவின் பிரகாஷ் படுகோனே, முதலிடம் பிடித்து இருந்தார். கடந்த 2015, மார்ச் 1ல், சர்வதேச தரவரிசையில் ‘நம்பர்–1’ இடம் பிடித்த, முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றிருந்தார் செய்னா நேவல். தற்போது, உலக பாட்மின்டன் தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்தை எட்டிய, இரண்டாவது நட்சத்திரம் ஆனார் ஸ்ரீகாந்த்.

இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில்.‘‘ உலக தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்தை பிடித்தது பெரும் மகிழ்ச்சி. தற்போதைய காமன்வெல்த், அடுத்து ஆசிய விளையாட்டு என, பெரிய தொடர்களில் சாதிக்க வேண்டும். பின், இரு ஆண்டுக்கு பின் வரவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் (2020) எனது தேசத்தை பெருமை அடையச் செய்ய வேண்டும்,’’ என்றார்.

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?