Advertisement


இந்திய பெண்கள் அணி அசத்தல்

ஏப்ரல் 12, 2018.
 Comments  
 


India, England, Women ODI Cricket
 

நாக்பூர்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், கேப்டன் மிதாலி ராஜ், தீப்தி சர்மா அரைசதம் கடந்து கைகொடுக்க, இந்திய பெண்கள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடரை 2–1 எனக் கைப்பற்றி, கோப்பை வென்றது.

இந்தியா வந்த இங்கிலாந்து பெண்கள் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாக்பூரில் நடந்தது.

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இங்கிலாந்து அணிக்கு அமி ஜோன்ஸ் (94), கேப்டன் ஹீதர் நைட் (36) கைகொடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஏமாற்ற இங்கிலாந்து அணி, 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 201 ரன்கள் எடுத்தது.

மிதாலி அபாரம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு மந்தனா (53) அரைசதம் கடந்து ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ ஆனார். அபாரமாக ஆடிய கேப்டன் மிதாலி ராஜ், ஒருநாள் அரங்கில் தனது 50வது அரைசதத்தை பதிவு செய்தார். ஹார்ட்லி பந்தை சிக்சருக்கு அனுப்பிய தீப்தி சர்மா, அரைசதம் கடந்து வெற்றியை உறுதி செய்தார்.

இந்திய அணி, 45.2 ஓவரில், 2 விக்கெட்டுக்கு, 202 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிதாலி (74), தீப்தி (54) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?