Advertisement


ரெய்னா காயம்: சென்னைக்கு பின்னடைவு

ஏப்ரல் 12, 2018.
 Comments  
 


Suresh Raina, Chennai Super Kings, IPL T20 Cricket, Injury
 

சென்னை: காயம் காரணமாக அடுத்த இரு போட்டிகளில் ரெய்னா பங்கேற்ற மாட்டார் என கூறப்படுகிறது. 

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 11வது ‘சீசன்’ நடக்கிறது. இதில் கடந்த 10ம் தேதி சென்னையில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, சென்னை அணிகள் மோதின. இதில், நரைன் வீசிய 10வது ஓவரில் ரன் எடுக்க ஓடிய போது சென்னை வீரர் ரெய்னா, கெண்டைக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால், சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது. 

இதனால், பஞ்சாப் (ஏப். 15, மொகாலி), ராஜஸ்தான் (ஏப். 20, புனே) அணிகளுக்கு எதிரான லீக் போட்டிகளில் இவர் பங்கேற்க மாட்டார். இதையடுத்து, ஐ.பி.எல்., அரங்கில் ரெய்னா இல்லாமல் முதல் முறையாக களமிறங்க உள்ளது சென்னை அணி. 

ஏற்கனவே, கேதர் ஜாதவ் விலகிய நிலையில், ரெய்னாவும் காயத்தால் அவதிப்படுவது, சென்னை அணிக்கு சிக்கல் தான். இதனால், காயத்தில் இருந்து மீண்ட, தமிழகத்தின் முரளி விஜய், சென்னை அணிக்கு துவக்கம் தர வாய்ப்புள்ளது.

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?