Advertisement


சென்னை போட்டிகள் புனேவுக்கு மாற்றம்

ஏப்ரல் 11, 2018.
 Comments [4]  
 


dhoni
 

மும்பை: சென்னையில் நடக்க இருந்த ஐ.பி.எல்., போட்டிகள் புனே நகருக்கு மாற்றப்பட்டன.

இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., ‘சீசன்’ நடக்கிறது. இரண்டு ஆண்டு தடைக்குப்பின் மீண்டு வந்த சென்னை, ராஜஸ்தான் அணிகளுடன் பெங்களூரு, பஞ்சாப் உள்ளிட்ட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த 10ல், சென்னை– கோல்கட்டா அணிகள் மோதிய போட்டி சென்னையில் நடந்தது. எதிர்ப்புகளை தாண்டி நடந்த இப்போட்டியில் சென்னை அணி வென்றது. இந்நிலையில், வீரர்களின் பாதுகாப்பு கருதி சென்னையில் நடக்க இருந்த 6 போட்டிகள் திருவனந்தபுரம், புனே, விசாகப்பட்டினம், ராஜ்கோட் ஆகிய நான்கு இடங்களில் ஏதாவது ஒன்றில் மாற்றப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில், மீதம் உள்ள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து ஐ.பி.எல்., சேர்மன் ராஜிவ் சுக்லா கூறுகையில்,‘‘ சென்னையில் ஐ.பி.எல்., போட்டிகள் நடத்துவதற்கு பாதுகாப்பு தர இயலாது என போலீசார் கைவிரித்துவிட்டனர். இதனால், மீதமுள்ள போட்டிகள் புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளன,’’ என்றார். 

 

 

 

 

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
11   4  
Nandakumar 2 weeks ago | Report abuse
சினிமா போன்ற எவ்வளவோ கேளிக்கைகள் இருக்கின்றன. சினிமா அரங்குகள் முன் போராட்டம் நடத்தட்டும். அது முடியுமா ? கிரிக்கெட் ரசிகர்கள் எவரும் இவர்களுக்கு வோட்டு போடக்கூடாது. இவர் படங்களுக்கு போக கூடாது.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
10   7  
maddy 2 weeks ago | Report abuse
தமிழகத்துக்கு வரவேண்டிய வரிப்பணங்கள் எல்லாம் புனேவிற்கு சென்றுவிட்டன... அரசுத்துறைக்கு நட்டமே நமது அதிமேதாவிகளால்...


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
2   1  
kannaiya srinivasan 2 weeks ago | Report abuse
நல்லது எங்கு இருந்தாலும் வாழ்க...


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
11   1  
Vijay 2 weeks ago | Report abuse
அப்போ ஐஸ் விக்கிற அண்ணாச்சி , மாங்காய் விக்கிற கிழவி , CSK கொடி CSK பனியன் விக்கிற அக்கா எல்லோரு பொழப்பும் அம்பேல் ஒரு சிலரின் லாபம் ஒரு சிலரின் நஷ்டம் ....




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?