Advertisement


சென்னைக்கு கிடைத்த புதிய ‘ஹீரோ’ பில்லிங்ஸ்

ஏப்ரல் 11, 2018.
 Comments  
 


Sam Billings
 

சென்னை: கோல்கட்டாவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், 23 பந்தில் 56 ரன்கள் குவித்து, சென்னை அணியின் புதிய ஹீரோவாக உருவெடுத்துள்ளார் சாம் பில்லிங்ஸ்.

இந்தியாவில் ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ தொடரின் 11வது ‘சீசன்’ நடக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதின. இரண்டு ஆண்டு தடைக்குப்பின், சொந்த மண்ணில் முதல் போட்டி என்பதால் வெற்றியை நோக்கி சென்னை களமிறங்கியது.

முதலில் பேட்டிங் செய்த கோல்கட்டா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுக்க, கடின இலக்கைத் துரத்தியது சென்னை. ஒரு கட்டத்தில் 52 பந்துகளில் 103 ரன்கள் தேவை என்ற நிலையில், கேப்டன் தோனியுடன் இணைந்தார் சாம் பில்லிங்ஸ். 23 பந்தில் 56 ரன் விளாசி, சென்னை அணிக்கு வெற்றியை எளிதாக்கினார்.

இதையடுத்து, சென்னை அணியின் புதிய ஹீரோவாக உருவெடுத்துள்ளார் பில்லிங்ஸ். கடந்த சீசனில் டில்லி அணிக்காக விளையாடியவர் இவர். இம்முறை கடைசி நேரத்தில் சென்னை அணி, ரூ. 1 கோடி அடிப்படை விலைக்கு வாங்கியது.

அப்போது, சென்னை அணி வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘தோனியுடன் ‘செல்பி’ எடுக்கவே பதட்டப்பட்டவர், இனி அவருடன் விளையாடப் போகிறார்,’ என, தெரிவித்தது. தற்போது, கிடைத்த முதல் வாய்ப்பில், தோனியுடன் இணைந்து விளையாடி, வெற்றிக்கு கைகொடுத்து, அசத்தினார்.

என்ன பேசினார்

இது குறித்து சாம் பில்லிங்ஸ் கூறியது: போட்டியில் ‘பார்ட்னர்ஷிப்’ தர தோனியை விட சிறந்த வீரர் இருக்க முடியாது. மிகவும் அமைதியாக ரன் சேர்க்க உதவினார். ‘டுவென்டி–20’ போட்டியில் கிடைத்த வாய்ப்பில் ரன் சேர்க்க வேண்டும். அதே நேரம், எல்லா நேரத்திலும் மனதளவில் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடாது. ரன் எடுக்கும்போது, தோனி என்னிடம் அதிகமாக பேசவில்லை. பந்துகளை வீணடிக்காமல் ரன் சேர்ப்பது குறித்து மட்டும் விவாதித்தோம்.

ரசிகர்கள் ஆர்வம்

கடினமான சூழ்நிலையில், பவுண்டரி அல்லது சிக்சர் அடிக்க திறமை தேவை. ஆனால், தோனி இதை மிகவும் எளிதாக செயல்படுத்தினார். இதைத்தான் இவரிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன். எங்களின் பயிற்சியை பார்க்கவே சென்னையில் 10 ஆயிரம் ரசிகர்கள் திரண்டனர். இதன் மூலம், இவர்கள் எந்த அளவுக்கு ஆர்வத்துடன் உள்ளனர் என தெரிந்தது.

இவ்வாறு பில்லிங்ஸ் கூறினார்.

தோனி மகிழ்ச்சி

சென்னை அணி கேப்டன் தோனி கூறுகையில்,‘‘ இரண்டு ஆண்டுக்குப்பின் சென்னையில் நடந்த போட்டியில் வென்றது மகிழ்ச்சி. இரு அணி பவுலர்களும் விக்கெட் வீழ்த்த சிரமப்பட்டனர். ஆனால், அதிகமான ரன் குவித்ததால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் போட்டியை கண்டுகளித்தனர்,’’ என்றார்.

Advertisement

ஹைதராபாத் vs சென்னை , போட்டி 20
இந்திய பிரீமியர் லீக், 2018
4/22/2018 , 16:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?