Advertisement


சாம்பியன்ஸ் லீக்: வெளியேறியது பார்சிலோனா

ஏப்ரல் 11, 2018.
 Comments  
 


messi
 

ரோம்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரிலிருந்து பார்சிலோனா அணி வெளியேறியது. ரோமா அணிக்கு எதிரான காலிறுதி சுற்றின் இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்தது.

ஐரோப்பாவில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. இத்தாலியின் ரோம் நகரில் நடந்த காலிறுதி சுற்றின் இரண்டாவது போட்டியில் பார்சிலோனா, ரோமா அணிகள் மோதின. இதன் 6வது நிமிடத்தில் ரோமா அணி சார்பில் எடின் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்திய ரோமா அணிக்கு டேனியலி (58வது நிமிடம்), காஸ்டாஸ் (82) கைகொடுத்தனர். நட்சத்திர வீரர்களான மெஸ்சி, இனியஸ்டா இருந்தும் பார்சிலோனா அணியால் பதிலடி தர முடியவில்லை. முடிவில், பார்சிலோனா அணி 0–3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

ஏற்கனவே, நடந்த காலிறுதி முதல் போட்டியில் பார்சிலோனா 4–1 என வென்றிருந்தது. இதன் மூலம், இரு போட்டிகளையும் சேர்த்து இரு அணிகளும் தலா 4 கோல் அடித்துள்ளன. ஆனால், அன்னிய மண்ணில் கோல் அடித்ததன் அடிப்படையில் பார்சிலோனாவை (0) முந்திய ரோமா (1) அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இதுவரை, 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பார்சிலோனா அணி இம்முறை காலிறுதியுடன் திரும்பியது.

 

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?