Advertisement


யார் பக்கம் சேப்பாக்கம்! * இன்று திக்...திக்...திக்! * சென்னை–கோல்கட்டா மோதல்

ஏப்ரல் 09, 2018.
 Comments [4]  
 


IPL Cricket, chennai, kolkata match,
 

 சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு ஆண்டுக்கு பின் சொந்தமண்ணில் களம் காணும் சென்னை, மீண்டும் வெல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதால், சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், கடந்த இரு ஆண்டுகளாக ஐ.பி.எல்., போட்டிகள் தமிழகத்தில் நடக்கவில்லை. தற்போது, மீண்டும் தோனி தலைமையில் திரும்பியுள்ளது சென்னை அணி. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2015க்குப் பின், இன்று நடக்கும் லீக் போட்டியில், சென்னை அணி, தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ள கோல்கட்டாவை சந்திக்கிறது. 

கைகொடுக்குமா பேட்டிங்

மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியின் விளிம்புக்கு சென்று மீண்டது சென்னை அணி. கடைசி நேரத்தில் பிராவோ தயவில் கிடைத்த வெற்றி, மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கும். 

கடந்த முறை அம்பதி ராயுடு, வாட்சன், ஜடேஜா என, பலரும் பேட்டிங்கில் ஏமாற்றம் தந்தனர். ஒற்றை இலக்கில் திரும்பிய கேப்டன் தோனி, ரெய்னா இருவரும் இன்று சுதாரித்துக் கொள்வர் எனத் தெரிகிறது. கடைசி நேரத்தில் சிக்சர் மழை பொழிந்த பிராவோ மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கைவிரல் காயத்தால் அவதிப்படும் டுபிளசி, இன்றும் களமிறங்காதது பின்னடைவு தான். 

இதனால், முரளி விஜய் துவக்கம் தருவார் எனத் தெரிகிறது. 

ஷர்துல் வருகை

வேகப்பந்து வீச்சில் மார்க் உட்டுக்குப் பதில், இந்தியாவின் புதிய வரவு ஷர்துல் தாகூர் இடம் பெறலாம். ‘சுழலில்’ விக்கெட் சாய்க்காத ஹர்பஜன், ரன்களை வாரி வழங்கும் இம்ரான் தாகிர், ஜடேஜா என, ‘சீனியர்கள்’ இணைந்து, மொத்தம் 5 ஓவர்கள் மட்டும் தான், முதல் போட்டியில் பவுலிங் செய்தனர். சுழலுக்கு சாதகமான சென்னை மண்ணில், இன்று சாதிக்கலாம். 

சபாஷ் கார்த்திக்

ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்காக விளையாட முடியாத ஏக்கத்தில் உள்ள தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், கோல்கட்டா அணி கேப்டனாக களமிறங்குகிறார். முதல் போட்டியில் கோஹ்லியின் பெங்களூருவை வீழ்த்திய உற்சாகத்தில் இங்கு வந்துள்ளனர். 

19 பந்தில் அரைசதம் விளாசிய சுனில் நரைன், உத்தப்பா, கிறிஸ் லின், ஆன்ட்ரூ ரசல், நிதிஷ் ராணா என, பலர் பேட்டிங்கில் கைகொடுக்கின்றனர். ‘சுழல்’ மும்மூர்த்திகள் சுனில் நரைன், பியுஸ் சாவ்லா, குல்தீப் யாதவ் கூட்டணி, சென்னை மண்ணிலும் மிரட்டலாம்.

 

ரசிகர்களுக்கு கட்டுப்பாடு

காவிரி பிரச்னை காரணமாக, தமிழகத்தில் ஐ.பி.எல்., போட்டிகள் நடத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும். திட்டமிட்டபடி, இன்று போட்டி நடக்கும் என, கூறப்பட்டுள்ளது. 2000 போலீசார் பாதுகாப்பு வழங்க உள்ளனர். தவிர, மைதானத்துக்கு வரும் ரசிகர்கள், அலை பேசி, பேனர் உட்பட எந்தவொரு பொருளும் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

கேதர் ஜாதவ் விலகல்

சென்னை அணிக்காக ரூ. 7.8 கோடிக்கு வாங்கப்பட்டவர் ‘ஆல் ரவுண்டர்’ கேதர் ஜாதவ். மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் தொடையின் பின்பகுதி காயத்தால் (கிரேடு 2 வகை) அவதிப்பட்டார். பேட்டிங்கின் போது, பாதியில் ‘பெவிலியன்’ திரும்பினார். பின் கடைசி வீரராக களமிறங்கி, சிக்சர், பவுண்டரி அடித்து, சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.

இவருக்கு ‘ஸ்கேன்’ செய்து பார்த்ததில், தொடை தசை நார்கள் கிழிந்து இருப்பதால், தொடர்ந்து இந்த சீசன் முழுவதும் விளையாட முடியாது. இதனால், ஐ.பி.எல்., தொடரில் இருந்து ஜாதவ் விலகினார்.

இதுகுறித்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி கூறுகையில்,‘‘ சென்னை அணியின் ‘மிடில் ஆர்டரில்’ ஜாதவ், முக்கிய வீரராக இருந்தார். இவரது விலகல், எங்களுக்கு பெரிய இழப்பு,’’ என்றார்.

Advertisement

ஹைதராபாத் vs சென்னை , போட்டி 20
இந்திய பிரீமியர் லீக், 2018
4/22/2018 , 16:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Ebu 2 weeks ago | Report abuse
இங்கே பக் பக் ன்னு இருக்கே ..


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
E. RAJAVELU 2 weeks ago | Report abuse
kether jadavukku 7.8 Crore athikam ethilum recomentation ullathena ninaikkiren.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
1   0  
kannaiya srinivasan 2 weeks ago | Report abuse
சேப்பாக்கம் எப்பவுமே திறமையின் பக்கம்தான்...


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
1   1  


Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?