Advertisement


இந்திய பெண்கள் தோல்வி

ஏப்ரல் 09, 2018.
 Comments  
 


ODI Cricket, india lose england women
 

நாக்பூர்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பெண்கள் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. நேற்று, 2வது போட்டி நாக்பூரில் நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணிக்கு மந்தனா (42), தீப்தி சர்மா (26*) மட்டும் ஆறுதல் தந்தனர். கேப்டன் மிதாலி ராஜ் (4), ஹர்மன்பிரீத் கவுர் (3), வேதா (9) உள்ளிட்ட மற்ற வீராங்கனைகள் ஏமாற்ற, இந்திய அணி, 37.2 ஓவரில், 113 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.

சுலப இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு டேனியல் வியாட் (47) நல்ல துவக்கம் தந்தார். அமி ஜோன்ஸ் (0) ஏமாற்றினார். பின் இணைந்த டாமி பியூமன்ட் (39*), கேப்டன் ஹீதர் நைட் (26*) அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இங்கிலாந்து அணி, 29 ஓவரில், 2 விக்கெட்டுக்கு, 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடர் 1–1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வரும் 12ல் நாக்பூரில் நடக்கவுள்ளது.

Advertisement

ஹைதராபாத் vs சென்னை , போட்டி 20
இந்திய பிரீமியர் லீக், 2018
4/22/2018 , 16:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?