Advertisement


ராஜஸ்தான் அணி தோல்வி

ஏப்ரல் 09, 2018.
 Comments  
 


Ipl Cricket, rajasthan royals team hyderabad
 

ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இந்தியாவில் 11வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில், ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன், பீல்டிங் தேர்வு செய்தார்.

சாகிப் ‘இரண்டு’

ராஜஸ்தான் அணிக்கு எதுவும் சரியாக அமையவில்லை. ஷார்ட் (4), ரகானே (13), ஸ்டோக்ஸ் (5) நீடிக்கவில்லை. 

சாகிப் அல் ஹசன் வீசிய போட்டியின் 14வது ஓவரின் முதல் பந்தில், திரிபாதி (17) அவுட்டானார். 5வது பந்தில் அவுட்டான சாம்சன் (49), அரைசத வாய்ப்பை இழந்தார். ராஜஸ்தான் அணி, 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 125 ரன்கள் மட்டும் எடுத்தது. 

தவான் அரைசதம்

எளிய இலக்கை விரட்டிய ஐதராபாத் அணியை சகா (5) கைவிட்டார். பின் தவான், வில்லியம்சன் இணைந்தனர். ‘டக்’ அவுட் வாய்ப்பில் இருந்து தப்பிய தவான், அடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குல்கர்னி, உனத்கட் பந்துகளில் சிக்சர் விளாசினார். 

ஸ்டோக்ஸ் பந்துகளில் தொடர்ந்து பவுண்டரிகளாக அடிக்க, வெற்றி இலக்கை வேகமாக நெருங்கியது ஐதராபாத். தவான், ஐ.பி.எல்., அரங்கில் 29வது அரைசதம் அடித்தார். கடைசியில் இவர், ஒரு பவுண்டரி அடிக்க, ஐதராபாத் அணி, 15.5 ஓவரில், 1 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டில் வீழ்ந்தது. தவான் (77 ரன், 57 பந்து), வில்லியம்சன் (36) அவுட்டாகாமல் இருந்தனர்.  

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?