Advertisement


கோல்கட்டா அணி கலக்கல் வெற்றி

ஏப்ரல் 08, 2018.
 Comments [1]  
 


IPL T20 Cricket, Kolkata, Bangaluru, Sunil Narine
 

கோல்கட்டா: பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சுனில் நரைன் 17 பந்தில் அரைசதமடித்து கைகொடுக்க, கோல்கட்டா அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா, பெங்களூரு அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

பெங்களூரு அணிக்கு பிரண்டன் மெக்கலம் நல்ல துவக்கம் தந்தார். இவர், வினய் குமார் வீசிய முதல் ஓவரில், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். குயின்டன் டி காக் (4) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய மெக்கலம் (43), சுனில் நரைன் ‘சுழலில்’ போல்டானார்.

குல்தீப் வீசிய 10வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் விளாசிய டிவிலியர்ஸ், நரைன், ஜான்சன் வீசிய பந்துகளை சிக்சர், பவுண்டரிக்கு அனுப்பினார். 

இவருக்கு ஒத்துழைப்பு தந்த கேப்டன் கோஹ்லி, பியுஸ் சாவ்லா பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்திருந்த போது நிதிஷ் ராணா பந்தில் டிவிலியர்ஸ் (44), கோஹ்லி (31) அடுத்தடுத்து அவுட்டாகினர். மன்தீப்(37) ஓரளவு கைகொடுத்தார். 

பெங்களூரு அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 176 ரன்கள் எடுத்தது. கோல்கட்டா சார்பில் ராணா, 2 விக்கெட் கைப்பற்றினார்.

சுனில் விளாசல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு சுனில் நரைன் பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவக்கினார். கிறிஸ் லின் (5) ஏமாற்றினார். வோக்ஸ் வீசிய 4வது ஓவரில், 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்த நரைன், வாஷிங்டன் சுந்தர் வீசிய 5வது ஓவரில், ஒரு பவுண்டரி, 2 சிக்சர் அடித்து 17 பந்தில் அரைசதமடித்தார். இவர், 19 பந்தில், 5 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 50 ரன்னில் அவுட்டானார். ராபின் உத்தப்பா (13) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய நிதிஷ் ராணா (34) ஓரளவு கைகொடுத்தார். உமேஷ் யாதவ் வீசிய 17வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ஆன்ட்ரி ரசல் (15), பெரிய அளவில் சோபிக்கவில்லை. நிதானமாக ஆடிய கேப்டன் தினேஷ் கார்த்திக், யுவேந்திர சகால் வீசிய 14வது ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். குல்வந்த் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய வினய் குமார் வெற்றியை உறுதி செய்தார்.

கோல்கட்டா அணி, 18.5 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கார்த்திக் (35), வினய் (6) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை கோல்கட்டா அணியின் சுனில் நரைன் வென்றார்.

9,000 ரன்கள்

பெங்களூரு அணியின் பிரண்டன் மெக்கலம், தனது 8வது ரன்னை கடந்த போது, ஒட்டுமொத்த ‘டுவென்டி–20’ அரங்கில் 9,000 ரன்கள் குவித்த 2வது வீரரானார். இதுவரை இவர், 330 போட்டியில், 7 சதம், 47 அரைசதம் உட்பட, 9,035 ரன்கள் எடுத்துள்ளார். முதலிடத்தில் கிறிஸ் கெய்ல் (11,068 ரன், 323 போட்டி) உள்ளார்.

Advertisement

ஹைதராபாத் vs சென்னை , போட்டி 20
இந்திய பிரீமியர் லீக், 2018
4/22/2018 , 16:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Rajesh 2 weeks ago | Report abuse
வாழ்த்துகள் தினேஷ் வெல்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?