Advertisement


சென்னை அணி ‘திரில்’ வெற்றி: பிராவோ சிக்சர் மழை

ஏப்ரல் 07, 2018.
 Comments [2]  
 


IPL T20 Cricket, Chennai, Mumbai, Bravo
 

மும்பை: பிராவோ சிக்சர் மழை பொழிய, ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. 

இந்தியாவில் ஐ.பி.எல்., உள்ளூர் ‘டுவென்டி–20’ தொடரின் 11வது சீசன் நேற்று துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் முதல் போட்டி நடந்தது. சென்னை அணி, இரு ஆண்டு தடைக்குப் பின் களமிறங்கியது. ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணிக்கு எதிரான, ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

வாட்சன் நம்பிக்கை: மும்பை அணிக்கு எவின் லீவிஸ் (0), ரோகித் சர்மா (15) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. சூர்யகுமார் (43), இஷான் கிஷான் (40) நம்பிக்கை தந்தனர். கடைசி நேரத்தில் பாண்ட்யா (22), குர்னால் (41) கைகொடுக்க, மும்பை அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. சென்னை சார்பில் வாட்சன் 2, சகார், இம்ரான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

விக்கெட் சரிவு: அடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு எதுவும் சரியாக அமையவில்லை. வாட்சன் (16), ராயுடு (22) ஏமாற்ற, ரெய்னா (4), தோனி (5) ஒற்றை இலக்கில் திரும்பினர். ஜடேஜா (12), சகார் (0) சொதப்ப, சென்னை அணி திணறியது.

பிராவோ அபாரம்: மனம் தளராத பிராவோ, தனி நபராக போராடினார். சிக்சர் மழை பொழிந்த இவர், மெக்லீனகனின் 18 வது ஓவரில் 20 ரன் எடுக்க, சென்னை பக்கம் விசில் சத்தம் அதிகமாக கேட்டது. பும்ராவின் 19 வது ஓவரில் 3 சிக்சர் அடித்த பிராவோ (68), அரைசதம் எடுத்து அவுட்டானார்.


‘திரில்‘ வெற்றி:  முஸ்தபிஜூர் வீசிய கடைசி ஓவரில் 7 ரன் தேவைப்பட்டன. தொடைப்பகுதி காயத்தால் அவதிப்பட்ட ஜாதவ், முதல் 3 பந்துகளை வீணடிக்க, ‘டென்ஷன்’ எகிறியது. 4வது பந்தில் சிக்சர் அடிக்க, ஸ்கோர் சமன் ஆனது. அடுத்த பந்தில் பவுண்டரி அடிக்க, சென்னை அணி 19.5 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 169 ரன்கள் எடுத்து, 1 விக்கெட்டில் ‘திரில்’ வெற்றி பெற்றது. ஜாதவ் (24), இம்ரான் (2) அவுட்டாகாமல் இருந்தனர். 

இதெல்லாம் முதல்...

* ஐ.பி.எல்., சீசன் 11ல், முதல் ‘டாஸ்’ வென்றார் தோனி

* சென்னை வீரர் சகார் வீசிய முதல் பந்தை, ரோகித் சர்மா சந்தித்தார்.

* முதல் ரன், ரோகித் அடித்த, பவுண்டரி வடிவில் வந்தது.

* முதல் விக்கெட் வீழ்த்தினார் சகார்

* முதல் சிக்சரை ரோகித் அடித்தார்.

‘டி.ஆர்.எஸ்.,’

முதன் முதலாக ஐ.பி.எல்., தொடரில், அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை (‘டி.ஆர்.எஸ்.,) முறை பயன்படுத்தப்படுகிறது. இதை, மும்பை வீரர் லீவிஸ், பயன்படுத்தி, வீணாக்கினார்.

‘டக்–அவுட்’ சோகம்

சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியை, ‘டக்’ அவுட்டுடன் துவக்கினார் வெஸ்ட் இண்டீசின் எவின் லீவிஸ். நேற்று முதன் முதலாக களமிறங்கிய ஐ.பி.எல்., போட்டியிலும் ‘டக்’ அவுட்டானார்.

முதல் ஓவர்

மும்பை அணிக்காக, 486.3 ஓவர்கள் பவுலிங் செய்த ஹர்பஜன், நேற்று சென்னை அணிக்காக முதல் ஓவரை, மும்பைக்கு எதிராக வீசினார்.

பாண்ட்யா காயமா

நேற்று 20வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட மும்பை வீரர் பாண்ட்யா, ரன் எடுக்க ஓடிய போது, வலது கணுக்கால் வலியால் அவதிப்பட்டார். இருப்பினும், மீண்டு வந்த இவர், வாட்சன், ரெய்னாவை அவுட் செய்தார். 

Advertisement

ஹைதராபாத் vs சென்னை , போட்டி 20
இந்திய பிரீமியர் லீக், 2018
4/22/2018 , 16:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
8   0  
R. Sundaram 2 weeks ago | Report abuse
டி டுவெண்ட்டி கிரிக்கெட்டின் த்ரில்லே இதுதான்..பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனியும் சொற்ப ரன்னில் நடைகட்டியதால் டிவி யை ஆப் செய்துவிட்டு படுத்துவிட்டேன்..இன்றைக்கு காலையில் நியூஸ் பார்த்தால்...சென்னை வெற்றி என்று பார்த்து திகைத்து போனேன்...சபாஷ் பிராவோ...சபாஷ் டோனி...அதிர்ஷ்டக்காரர் ஐயா நீர்


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
7   0  
Rahim 2 weeks ago | Report abuse
பிராவோ சூப்பர் ஆட்டம்......




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?