Advertisement


பயஸ் உலக சாதனை

ஏப்ரல் 05, 2018.
 Comments [1]  
 


Paes, Davis Cup Tennis, World Record
 
டியான்ஜின்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றி பெற்று உலக சாதனை படைத்தார் இந்தியாவின் லியாண்டர் பயஸ்.

சீனாவின் டியான்ஜின் பகுதியில் டேவிஸ் கோப்பை டென்னிஸ், ‘ஆசிய– ஓசியானா’ பிரிவு ‘குரூப்–1’ இரண்டாவது சுற்றுநடந்தது. இதில், இந்தியா, சீனா அணிகள் மோதின. முதல் நாளில் நடந்த இரண்டு ஒற்றையர் போட்டிகள் முறையே ராம்குமார் ராமநாதன், சுமித் நாகல் தோல்வியடைந்தனர். இதனால், இந்திய அணி 0–2 என பின்தங்கியது.

நேற்று மீதம் உள்ள மூன்று போட்டியிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது. இரட்டையர்பிரிவில் இந்தியாவின் ‘சீனியர்’ வீரர்களான பயஸ், போபண்ணா ஜோடி, சீனாவின் மோ சின், சிஜாங் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 5–7 என இழந்த இந்திய ஜோடி, பின் எழுச்சி பெற்றது. அடுத்த இரண்டு செட்டையும் 7–6, 7–6 என போராடி கைப்பற்றியது. முடிவில், பயஸ், போபண்ணா ஜோடி 5–7, 7–6, 7–6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

‘பிளே–ஆப்’ தகுதி: இதன் பின், நடந்த மாற்று ஒற்றையர் போட்டிகளில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் (எதிர்– டி வியு), பிரஜ்னிஷ் (எதிர்– இபாங்) தங்களின் போட்டிகள் வென்றனர். இந்திய அணி 3–2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம், தொடர்ந்து 5வது முறையாக உலக குரூப், ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. கடந்த நான்கு ஆண்டு முறையே செர்பியா (2014), செக் குடியரசு (2015), ஸ்பெயின் (2016), கனடா (2017) அணிகளிடம் வீழ்ந்தது.

43வது வெற்றி: இப்போட்டியில், பயஸ் தனது 43வது வெற்றியை பதிவு செய்தார். இதன் மூலம், டேவிஸ் கோப்பை அரங்கில்இரட்டையர் பிரிவில் அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் நிகோலா பீட்ராங்கெலியை முந்தி முதலிடம் பிடித்து சாதித்தார். தனது 16வது வயதில் (1990), முதல் முறையாக சக வீரர் ஜீசன் அலியுடன் ஜப்பானுக்கு எதிராக டேவிஸ் கோப்பையில் களமிறங்கினார். இதன் பின், சக வீரர் பூபதியுடன் இணைந்து தொடர்ந்து 24 வெற்றிகள் பெற்றார். தற்போது, ஜீசன் பயிற்சியாளராகவும், பூபதி இந்திய அணிக்கான விளையாடாத கேப்டனாகவும் இருக்கிறார். பயஸ் மட்டும் தனது 44வது வயதிலும் விளையாடி அசத்துகிறார்.

இந்தியாவுக்கு அர்ப்பணம்

சாதனை குறித்து பயஸ் கூறுகையில்,‘‘ மிகப்பெரிய இலக்கை அடைந்ததாக உணர்கிறேன். இந்த சாதனையை எனது பெற்றோர், மகள் அயானாவுக்கு மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அர்ப்பணிக்கிறேன். டேவிஸ் கோப்பையில் என்னுடன் விளையாடிய வீரர்கள், கேப்டன்கள் என அனைவருக்கும் நன்றி. பல ஏற்றம், இறக்கத்தை சந்தித்து இந்த சாதனையை எட்டி உள்ளேன். இந்திய மண்ணின் மைந்தனாக இருப்பதில் பெருமை அடைகிறேன். நான் எட்டிய இலக்கு, பல இந்திய இளைஞர்களுக்கு ஊக்கமாக அமையலாம். விளையாட்டு அல்லது பணி என எதுவென்றாலும், இந்திய இளம் தலைமுறையினர் உலக அளவில் சாம்பியனாக உருவெடுக்க வேண்டும். தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடுவேன்,’’ என்றார்.

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   3  


Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?