Advertisement


‘பத்ம பூஷன்’ விருது பெற்றார் தோனி

ஏப்ரல் 02, 2018.
 Comments [1]  
 


Dhoni, India, Cricket, Padma Bhushan Award
 

புதுடில்லி: ராணுவ கர்னல் உடையில் வந்து பத்ம பூஷன் விருதை பெற்றார் தோனி.

இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி, 37. கடந்த 2007 ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை வென்று தந்த இவருக்கு, ‘ராஜிவ் கேல் ரத்னா’ விருது வழங்கப்பட்டது. 2009ல் ‘பத்ம ஸ்ரீ’ பெற்றார்.

ஐ.சி.சி., சார்பில் வழங்கப்படும் சிறந்த வீரர் விருதை இரு முறை (2008, 2009) வென்ற முதல் வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு.  கபில்தேவுக்குப் (1983) பின், 28 ஆண்டுகள் கழித்து, 2011ல் ஒருநாள் உலக கோப்பை வென்று தந்தார்.

இதையடுத்து, இந்திய ராணுவத்தின் கவுரவ ‘லெப்டினென்ட் கர்னல்’ அந்தஸ்து தரப்பட்டது. நேற்று தோனிக்கு, இந்தியாவின் மூன்றாவது சிறந்த ‘பத்ம பூஷன்’ விருதை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்  வழங்கினார்.

கர்னல் உடையில்...: டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடந்த விருது நிகழ்ச்சியில் ராணுவ கர்னல் உடையில் பங்கேற்றார் தோனி. தனது பெயர் அறிவிக்கப்பட்டவுடன், மிடுக்காக நடந்து சென்று விருதினை பெற்றுக் கொண்டார். ஸ்னுாக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற பங்கஜ் அத்வானிக்கும் பத்ம பூஷன் விருது தரப்பட்டது.

பத்தாவது வீரர்

பத்ம பூஷன் விருது பெற்ற, 10வது கிரிக்கெட் நட்சத்திரம் ஆனார் தோனி. இதற்கு முன் சி.கே.நாயுடு (1956), விழிநாகரம் (1958), வினு மன்கட் (1973), கவாஸ்கர் (1980), தியோதர், லாலா அமர்நாத், கபில்தேவ் (1991), சந்து போர்டே (2002), டிராவிட் (2013) இவ்விரு பெற்றனர்.

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  


Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?