Advertisement


மீண்டும் பதக்கம்: சிந்து நம்பிக்கை

ஏப்ரல் 01, 2018.
 Comments  
 


Sindhu, Badminton, India, Commonwealth Games 2018
 

புதுடில்லி: ‘‘காமன்வெல்த் விளையாட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மீண்டும் பதக்கம் வெல்ல முயற்சிப்பேன்,’’ என,  சிந்து தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில், வரும் 4–15ல் காமன்வெல்த் விளையாட்டு நடக்கவுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சிந்து, செய்னா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். கடந்த 2014ல் நடந்த கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாடில் வெண்கலம் வென்ற சிந்துவின் கணுக்காலில் சமீபத்தில் சுளுக்கு ஏற்பட்டது. இதனால் இவர், காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது.

இதுகுறித்து சிந்து கூறியது: எனது கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டது. இதனால் பெரிய பாதிப்பு இல்லை. போட்டிக்கு முன், முழு உடற்தகுதி பெற்றுவிடுவேன். காமன்வெல்த் விளையாட்டுக்கு சிறப்பான முறையில் தயாராகி உள்ளேன். கடந்த முறை வெண்கலம் வென்ற நான், இம்முறை முழுத்திறமையை வெளிப்படுத்தி தங்கம் வெல்ல போராடுவேன். பாட்மின்டனில் இந்தியாவுக்கு நிறைய பதக்கம் கிடைக்கும். எத்தனை என்று கூற முடியாது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின், நான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என, ரசிகர்கள் விரும்புகின்றனர். 

இவ்வாறு சிந்து கூறினார்.

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?