Advertisement


சந்தோஷ் கால்பந்து: கேரளா சாம்பியன்

ஏப்ரல் 01, 2018.
 Comments [1]  
 


Santosh Trophy Soccer, Kerala, Champion, West Bengal
 

கோல்கட்டா: சந்தோஷ் டிராபி கால்பந்து தொடரில் கேரள அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில், ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் 4–2 என்ற கோல் கணக்கில் மேற்கு வங்க அணியை தோற்கடித்தது.

கோல்கட்டாவில், 72வது சந்தோஷ் டிராபி தேசிய கால்பந்து தொடர் நடந்தது. இதன் பைனலில் மேற்கு வங்கம், கேரளா அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 1–1 என, சமநிலை வகித்திருந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதன் முடிவில் போட்டி 2–2 என, மீண்டும் சமநிலையில் இருந்தது.

பின், வெற்றியாளரை நிர்ணயிக்க ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறை பின்பற்றப்பட்டது. இதில் கேரள அணி, 4–2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 6வது முறையாக கோப்பை வென்றது. இதற்கு முன், 1973–74, 1991–92, 1992–93, 2000–01, 2004–05 சீசனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய மேற்கு வங்க அணி, 33வது முறையாக கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்து, 13வது முறையாக 2வது இடம் பிடித்தது.

Advertisement

பெங்களூரு vs சென்னை , போட்டி 24
இந்திய பிரீமியர் லீக், 2018
4/25/2018 , 20:00
எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
malik 3 weeks ago | Report abuse
இதில் கூட தமிழகம் பின் தங்கித்த்தான் உள்ளது, இதில் கிரிக்கெட் ஆடுபவர்கள் எல்லாம் என்று.... ஒரு கூட்டம் தன் பொறாமையை காட்டி வருகிறது.முதலில் தமிழக வீரர்கள், கால்பந்து, ஹாக்கி,கபாடி போன்ற போட்டிகளில் இந்தியாவுக்கு விளையாடும் டீமுக்கு வரட்டும், பிறகு கிரிக்கட்டை பற்றி யோசிக்கட்டும்.




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?