Advertisement


‘திரும்ப வந்துட்டோம்’: கண் கலங்கிய தோனி

மார்ச் 30, 2018.
 Comments [6]  
 


dhoni
 

சென்னை: கேப்டன் ‘கூல்’ என பெயரெடுத்த தோனி, கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டார். பல தடைகளை உடைத்து மீண்டும் சென்னை அணிக்காக விளையாட இருப்பதை நினைத்து கண் கலங்கினார். அந்த தருணத்தில் ஓடி வந்த ‘நண்பேண்டா’ ரெய்னா, தண்ணீர் கொடுத்து ஆறுதல் அளித்தார்.

இந்திய கிரிக்கெட் போர்டால், ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ தொடர் நடத்தப்படுகிறது. இதன்11வது சீசன், வரும் ஏப்., 7ல் துவங்குகிறது.சூதாட்ட சர்ச்சையிலிருந்து மீண்ட சென்னை அணி, 2 ஆண்டுக்குப்பின் தடம் பதிக்கிறது. இதனால், தோனி தலைமையிலான சென்னை அணியினரின் பயிற்சியை பார்க்கவே தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிகின்றனர். தமிழ் ரசிகர்கள் தோனி மீது பாசத்தை பொழிகின்றனர்.

உதவிய ரெய்னா

இந்நிலையில், சென்னை அணி சார்பில் தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தோனி உணர்ச்சிகரமாக பேசினார். இந்த ‘வீடியோ’ தற்போது சமூகவலைதளங்களில் ‘வைரலாகி’ வருகிறது.

இதில், தோனி பேசியிருப்பதாவது: எனது மாநில ஜார்க்கண்ட் மற்றும் இந்திய அணிக்காக சில ‘டுவென்டி–20’ தொடர்களில் மட்டுமே கேப்டனாக இருந்துள்ளேன். ஆனால், சென்னை அணியை 8 ஆண்டுகளாக வழிநடத்தினேன். மீண்டும் சென்னையின் மஞ்சள் நிற ‘ஜெர்சியை’ அணிவது உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது. இப்படி தழுதழுத்த குரலால் தோனி பேசியதால், ரசிகர்களும் கண் கலங்கினார். நிலைமையை உணர்ந்த சக சென்னை வீரர் ரெய்னா, தோனிக்கு தண்ணீர் பாட்டில் தந்து சகஜமாக்கினார்.

ரசிகர்களுக்கு நன்றி

நமது திறமையை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த கால கசப்பான நினைவுகளை மறந்துவிடுவோம். இப்போது, ரசிகர்கள் முகத்தில் புன்னகையை பார்க்கிறேன்.  இனி, நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதுதான முக்கியம். சென்னை திரும்பி வந்துவிட்டது, நாம் திரும்ப வந்து விட்டோம். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஸ்பான்சர்கள், ரசிகர்களுக்கு நன்றி.

இவ்வாறு தோனி கூறியுள்ளார்.

      

 

 

 

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
GOPALAKRISHNAN 3 weeks ago | Report abuse
ரொம்ப சந்தோஷம் மாஹி . நல்லா விளையாட என் வாழ்த்துக்கள் . CSK is always great competitor under your leadership.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
4   0  
K. N. Krishna Moorthy 4 weeks ago | Report abuse
சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லாமல் நாங்களும் 2 வருடங்களாக ஐபில்போட்டியை பார்க்கவில்லை. டோனி தலைமையில் csk மீண்டும் முதலிடம் பெரும்.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
1   0  
saravanakumar 4 weeks ago | Report abuse
நாங்கள் ஆதரவு தருவோம் தோனிக்கு...........


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
4   3  
Kabilan E 4 weeks ago | Report abuse
இதெல்லாம் ஊரை ஏமாற்ற வேஷம் போடுறானுங்க...இந்த ஆள் சென்னை வந்து போக 4 லிருந்து 7 கோடி வரை பணம் வாங்குகிறார்...அரை மணி நேர நிகழ்ச்சி என்றால் மூன்று கோடி...எல்லாமே பணம் தான்...கண்ணீர் விட்டது கூட ஒரு marketing strategy தான்...


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
2   0  
giridharan 4 weeks ago | Report abuse
வரும் காலங்களில் சென்னை அணிக்கு வெற்றியை தேடி தரவேண்டியது உங்கள் கடமை. அதை செய்த அழ போடும் நாங்கள் எல்லாம் நன்பேண்டா.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
3   4  
sundar 4 weeks ago | Report abuse
எல்லாம் பொய் . சென்னை வெள்ளத்தால் மூழ்கியபோது இவர் எங்கிருந்தார்? என்ன உதவி செய்தார். நம் தமிழ் நாட்டு மக்களுக்கும் ஒரு விவஸ்தைஏ கிடையாது. நம் தமிழ் players கார்த்திக், சுந்தர், அஸ்வின் யாரும் கிடையாது. எங்கிருந்தோ வந்த தோனி. what use ?
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?