Advertisement


காமன்வெல்த் போட்டியில் தங்கம்: செய்னா நேவல் நம்பிக்கை

மார்ச் 28, 2018.
 Comments  
 


Saina, Badminton, Coomonwealth Games
 

புதுடில்லி: ‘‘காமன்வெல்த் போட்டியில் மீண்டும் தங்கம் வெல்வேன்,’’ என, செய்னா நேவல் தெரிவித்தார்.

இந்திய பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல், 28. கடந்த 2010, டில்லி காமன்வெல்த்தில் சாதித்த இவர், இப்போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார். தவிர, பதக்க பட்டியலில் இந்தியா, 2வது இடம் பிடிக்க இந்த தங்கம் உதவியது.

வரும் ஏப்., 4ல் துவங்கவுள்ள காமன்வெல்த் விளையாட்டு குறித்து செய்னா நேவல் கூறியது:

கடந்த 2010 காமன்வெல்த்தில், கடைசி நாள் துவக்கத்தில் இந்தியா 99 பதக்கம் வென்றிருந்தது. ஹாக்கி, பாட்மின்டன் பைனலில் களமிறங்கினோம். ஹாக்கியில் இந்தியா வெ ள்ளி வென்றது. பாட்மின்டனில் நான் தங்கம் கைப்பற்ற, பதக்க பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறினோம். இந்த நிகழ்வை மறக்க முடியாது.

கடந்த 2014, கிளாஸ்கோ போட்டியில் பல்வேறு காயங்கள் காரணமாக பங்கேற்க முடியாமல் போனது. இம்முறை தனிநபர், அணிகள் என, பல பிரிவுகளில், வலுவான நட்சத்திரங்களுடன் களமிறங்குகிறோம். இதில் இந்தியா அதிகமான பதக்கங்கள் வெல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

தவிர, உடற்தகுதியை சிறப்பாக பராமரித்தால், சாதனைகள் தேடி வரும். இதனால், பயிற்சி, உணவு விஷயங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். பாட்மின்டன் வசதிகளுக்கான அடிப்படை கட்டமைப்பும், இந்தியாவில் நன்கு முன்னேறி வருகிறது. 

இதனால், கோல்டு கோஸ்ட் போட்டி முடிந்து இந்தியா திரும்பும் நட்சத்திரங்கள், அதிகமான தங்க பதக்கத்துடன் தாயகம் திரும்புவர் என, நம்புகிறேன்.

இவ்வாறு செய்னா நேவல் கூறினார்.

Advertisement

பெங்களூரு vs டெல்லி , போட்டி 19
இந்திய பிரீமியர் லீக், 2018
4/21/2018 , 20:00
எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?