Advertisement


ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டு தடை: ஆஸி., கிரிக்கெட் அதிரடி நடவடிக்கை

மார்ச் 28, 2018.
 Comments  
 


Steve Smith, David Warner, Australia Cricket Board, One Year Ban
 

ஜோகனஸ்பர்க்: பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய, ஸ்டீவ் ஸ்மித், வார்னருக்கு தலா ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. சக வீரர் பான்கிராப்டிற்கு 9 மாத தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் கேப்டவுனில் நடந்தது. இதில், ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது அம்பலமானது. இதற்கான திட்டத்தை கேப்டன் ஸ்மித், துணைக்கேப்டன் வார்னர் தீட்டினர். இது தொடர்பாக விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஸ்மித்திற்கு ஒரு டெஸ்டில் பங்கேற்க தடை, 100 சதவீத அபராதம் விதித்தது. பான்கிராப்டிற்கு 75 சதவீத அபாராதம் விதித்தது. இது, குறைவான தண்டனை என விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு (சி.ஏ.,) விசாரணையின் முதல் கட்டமாக, மூன்று வீரர்களும் தாயகம் திரும்ப உத்தரவிடப்பட்டது. நேற்று, தனது விசாரணையை முடித்த சி.ஏ.,, தண்டனையை அறிவித்தது.

கேப்டனாக முடியுமா: சி.ஏ., வெளியிட்ட அறிக்கையில்,‘ ஸ்மித், வார்னருக்கு தலா ஒரு ஆண்டு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படுகிறது. பான்கிராப்ட் 9 மாதம் போட்டியில் பங்கேற்க முடியாது. தடை காலம் முடிந்த ஒரு ஆண்டுக்கு பின், ஸ்மித், பான்கிராப்ட் கேப்டன் பதவிக்கு முன்னிறுத்தப்படலாம். வார்னர் எப்போதும் தலைமைப்பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட மாட்டார். மூன்று வீரர்களும், தலா 100 மணி நேரம் கிரிக்கெட் வளர்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும். கிரிக்கெட்டுடன் தொடர்பில் இருப்பதற்காக, ‘கிளப்’ போட்டியில், விளையாட அனுமதி தரப்பட்டுள்ளது. இவர்கள் தண்டனையை எதிர்த்து 7 நாட்களுக்குள் ‘அப்பீல்’ செய்யலாம்,’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல்., இல்லை: கடந்த 2015 ஐ.பி.எல்., ‘சீசனில்’ கேப்டன் வார்னர் தனது ஐதராபாத் அணிக்கு கோப்பை வென்று தந்திருந்தார். ஸ்மித்தை பொறுத்தவரை கடந்த ‘சீசனில்’ புனே அணியை பைனல் வரை அழைத்துச்சென்றார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஐ.பி.எல்., தொடரிலும் விளையாட முடியாது.

ஐ.பி.எல்., சேர்மன் ராஜிவ் சுக்லா கூறுகையில்,‘‘ ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு, ஸ்மித், வார்னருக்கு தடை விதித்துள்ளது. இதனால், எதிர் வரும் ஐ.பி.எல்., தொடரிலும் இவர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவர்கள் இடம்பெற்றிருந்த ராஜஸ்தான், ஐதராபாத் அணியில் மாற்று வீரர்கள் சேர்க்கப்படுவர்,’’ என்றார்.

தப்பினார் பயிற்சியாளர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு தலைமை நிர்வாகி சந்தர்லாந்து கூறுகையில்,‘‘ கிரிக்கெட்டின் நன்மதிப்பை தக்க வைப்பதற்காக, அளிக்கப்பட்ட தண்டனை திருப்தி தருகிறது. இம்மாதிரியான நிகழ்வுகளிலிருந்து வீரர்கள் பாடம் கற்றுக்கொள்வர். இந்த விவகாரத்தில், பயிற்சியாளர் டேரன் லேமனுக்கு தொடர்பு இல்லை என்பதால், இவர் பதவியில் நீடிப்பார்,’’ என்றார்.

இந்திய தொடரில் இல்லை

இந்த ஆண்டு இறுதியில் (நவம்பர்– டிசம்பர்) ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒரு நாள், 3 ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அப்போதும், ஸ்மித், வார்னர் தடை காலத்தில் இருப்பதால் இத்தொடரில் விளையாட முடியாது.

வார்ன் எதிர்ப்பு

ஆஸ்திரேலிய முன்னாள் ‘சுழல்’ வீரர் வார்ன் முகநுாலில் வெளியிட்ட செய்தியில்,‘ கேப்டவுன் டெஸ்டில் நடந்த சம்பவம், ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகிற்கும் அதிர்ச்சியை தந்தது. இதற்கு முன், தென் ஆப்ரிக்காவின் டுபிளசி, பிலாண்டர் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கினர். இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் ஆதர்டன், இந்தியாவின் சச்சின் பெயர் கூட இது போன்ற பிரச்னையில் முன்பு  அடிபட்டது. இதனால், ஸ்மித், வார்னருக்கு விதிக்கப்பட்ட 12 மாத தடையை அதிகமானதாக கருதுகிறேன், என, குறிப்பிட்டுள்ளார்.

ரூ. 20 கோடி இழப்பு

உலக கிரிக்கெட் அரங்கில், அதிக சம்பளம் (ஆண்டுக்கு ரூ. 9.77 கோடி) வாங்குபவர் ஸ்மித். அணியின் ஒப்பந்தப்படி, ஆண்டுக்கு ரூ. 5.27 கோடி சம்பளம் வாங்குகிறார் வார்னர். இந்த இருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அடுத்த ஒரு ஆண்டில் அணிக்காக 13 டெஸ்ட், 24 ஒரு நாள், 5 ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்க முடியாது. போட்டி சம்பளம், ஐ.பி.எல்., மற்றும் ‘பிக் பாஷ்’ லீக் இழப்பு என மொத்தம் ரூ. 20 கோடி இழப்பை இரண்டு வீரர்களும் சந்திக்க உள்ளனர்.

என்ன குற்றம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு ஸ்மித்திற்கு தண்டனை அளித்ததற்கான குற்றத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி, பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்தது, இந்த திட்டத்தை தடுக்க தவறியது, பந்தை சேதப்படுத்தியதற்கான ஆதாரத்தை மறைத்தது, அம்பயர் மற்றும் ‘மேட்ச் ரெப்ரியிடம்’ தவறு நடக்காதது போல செயல்படுதல், திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி ரசிகர்களையும் ஏமாற்றுவது என மொத்தம் ஐந்து குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதைப்போல, வார்னர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன்படி, பந்தை சேதப்படுத்துவற்தான திட்டத்தை உருவாக்கியது, ‘ஜூனியர்’ வீரருக்கு பந்தின் தன்மையை மாற்ற அறிவுறுத்தியது, இவரை வைத்து திட்டத்தை நிறைவேற்றியது, தவறான அணுகுமுறையை கைவிட மறுத்தது, போட்டியின்போது போது இதை தெரிவிக்காமல் ரகசியம் காத்தது என, 5 குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

‘வில்லன்’ வார்னர்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் முக்கிய ‘வில்லன்’ வார்னர் தான் என, தெரியவந்துள்ளது. இவர், ஆஸ்திரேலிய அணி கேப்டனாக எப்போதும் தேர்வு செய்யப்பட மாட்டார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய கேப்டவுன் டெஸ்டில், தென் ஆப்ரிக்கா வலுவான இலக்கை நோக்கி முன்னேறியது. இதனால், உணவு இடைவேளையின், என்ன செய்வது? என, திட்டமிட்டனர்.

அப்போது, ‘பந்தை சேதப்படுத்தி, ‘சுவிங்’ செய்து விக்கெட்டுகளை வீழ்த்தலாம்,’ என்ற ‘ஐடியாவை’ வார்னர் தெரிவித்துள்ளார். இதை ஸ்மித்தும் ஏற்றுக் கொண்டார்.

‘ஜூனியர்’ வீரரான பான்கிராப்ட் தான் இந்த வேலையை முடிக்க வேண்டும் என, வார்னர் அறிவுறுத்தினார். பந்தை எப்படி சேதப்படுத்த வேண்டும் என்ற செய்முறை விளக்கத்தையும், ‘டிரசிங் ரூமில்’ செய்து காட்டியுள்ளார்.

‘சீனியர்’ கட்டளையை மீற முடியாத பான்கிராப்ட், முதலில் இரும்பு டேப் போன்ற பொருளை தேடியுள்ளார். இது கிடைக்காமல் போகவே, வீரர்கள் சாதாரணமாக வைத்திருக்கும் உப்புத் தாளை எடுத்துக் கொண்டு களமிறங்கினார். கடைசியில், எல்லாம் கேமராவில் வெட்ட வெளிச்சமானது.

இதில், ஸ்மித், பான்கிராப்ட் தங்கள் தவறுகளை ஒப்புக் கொண்ட போதும், வார்னர் இதுவரை எதுவும் பேசாமல் உள்ளார். இது கிரிக்கெட் ஆஸ்திரேலியா விசாரணையில் தெரியவர, ‘வில்லன்’ ஆகியுள்ளார் வார்னர்.

Advertisement

ஹைதராபாத் vs பஞ்சாப் , போட்டி 25
இந்திய பிரீமியர் லீக், 2018
4/26/2018 , 20:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?