Advertisement


காமன்வெல்த் ஹாக்கி: ராணி ராம்பால் கேப்டன்

மார்ச் 14, 2018.
 Comments  
 


Commonwealth Games, Women Hockey, India, Rani Rampal
 

புதுடில்லி: காமன்வெல்த் விளையாட்டு, இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டனாக ராணி ராம்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில், காமன்வெல்த் விளையாட்டு, வரும் ஏப். 4–15ல் நடக்கவுள்ளது. இதன் பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் மலேசியா, வேல்ஸ், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் வேல்ஸ் அணியை ஏப். 5ல் சந்திக்கிறது. அதன்பின், மலேசியா (ஏப். 6), இங்கிலாந்து (ஏப். 8), தென் ஆப்ரிக்கா (ஏப். 10) அணிகளுடன் மோதுகிறது.

இப்போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ராணி ராம்பால், துணைக் கேப்டனாக கோல்கீப்பர் சவிதா நியமிக்கப்பட்டுள்ளனர். மற்றபடி தீபிகா, சுனிதா லக்ரா, மோனிகா, பூணம் ராணி, நவ்ஜோத் கவுர், நவ்னீத் கவுர் உள்ளிட்டோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

கடந்த 2002ல் இங்கிலாந்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணி, 2006ல் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. கடந்த ஆண்டு ஆசிய கோப்பை வென்ற இந்திய பெண்கள் அணி, சமீபத்தில் தென் கொரியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை 3–1 எனக் கைப்பற்றியது.

அணி விவரம்: ராணி ராம்பால் (கேப்டன்), சவிதா (கோல் கீப்பர், துணைக் கேப்டன்), ரஜனி (கோல் கீப்பர்), தீபிகா, சுனிதா லக்ரா, தீப் கிரேஸ் எக்கா, குர்ஜித் கவுர், சுஷிலா சாணு, மோனிகா, நமிதா, நிக்கி பிரதன், நேஹா கோயல், லிலிமா மின்ஸ், வந்தனா, லால்ரெம்சியாமி, நவ்ஜோத் கவுர், நவ்னீத் கவுர், பூணம் ராணி.

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது ஒரு நாள் ஆட்டம்
இங்கிலாந்தில் இந்தியா, 3 ஓடிஐ தொடர்கள், 2018
7/17/2018 , 17:00
ஹெட்டிங்லேய், லீட்ஸ்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?