Advertisement


சர்தார் சிங் நீக்கம்

மார்ச் 13, 2018.
 Comments [1]  
 


sardar
 

புதுடில்லி: காமன்வெல்த் விளையாட்டிற்கான இந்திய ஹாக்கி அணியில் ‘சீனியர்’ வீரர் சர்தார் சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை. கோல்கீப்பர் ஸ்ரீஜேஸ் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். 

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் வரும் ஏப்ரல் 4ல் காமன்வெல்த் விளையாட்டு துவங்குகிறது. இதற்கான ஹாக்கி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் தலா 5 அணிகளாக இரு பிரிவுகளில் மோதுகின்றன. இந்திய அணியை பொறுத்தவரை இங்கிலாந்து, மலேசியா, பாகிஸ்தான், வால்ஸ் அணிகளுடன் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தானை (ஏப்.7) எதிர் கொள்கிறது. இத்தொடருக்கான, 18 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முழங்கால் காயத்திலிருந்து மீண்ட கோல்கீப்பர் ஸ்ரீஜேஸ், சமீபத்திய நியூசிலாந்து தொடரில் பங்கேற்றிருந்தார். தற்போது, இவர் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளார். 

கேப்டன் மன்பிரீத்

‘சீனியர்’ வீரரான சர்தார் சிங்கிற்கு இடம்கிடைக்கவில்லை. சமீபத்திய, அஸ்லான் ஷா கோப்பை தொடரில் கேப்டனாக செயல்பட்ட இவர், அணிக்கு 5வது இடமே பெற்றுத்தந்திருந்தார். கடந்த ஆசிய கோப்பையில் தங்கம், உலக ஹாக்கி லீக் பைனலில் வெண்கலம் வென்று தந்த கேப்டன் மன்பிரீத் சிங் மீண்டும் அணியை வழிநடத்த உள்ளார். துணைக்கேப்டனாக சிங்லென்சனா சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மற்றபடி இளம் வீரர்களான தில்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத்திற்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

அணி விவரம்: ஸ்ரீஜேஸ், சுராஜ், ரூபிந்தர் பால் சிங், ஹர்மன்பிரீத், வருண் குமார், கோதாஜித் சிங், குரிந்தர் சிங், அமித் ரோகிதாஸ், மன்பிரீத் சிங் (கேப்டன்), சிங்லென்சானா, சுமித், விவேக் பிரசாத், ஆகாஷ்தீப், எஸ்.வி.சுனில், குர்ஜந்த் சிங், மன்தீப் சிங், லலித் குமார், தில்பிரீத் சிங். 

 

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
sankar narayanan B 2 months ago | Report abuse
Way to go down the ion policy of hockey in india is role model how to not. They should learn from cricket...




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?