Advertisement


இந்திய அணிக்கு இரண்டாவது வெற்றி: இலங்கையை வீழ்த்தி பதிலடி

மார்ச் 12, 2018.
 Comments [3]  
 


India, Sri Lanka, T20 Tri Series Cricket
 

கொழும்பு: முத்தரப்பு ‘டுவென்டி–20’ தொடர் லீக் போட்டியில்,இந்திய அணி இரண்டாவது வெற்றி பெற்றது. நேற்று நடந்த லீக் போட்டியில், 6 விக்கெட் வித்தியாத்தில் இலங்கையை வீழ்த்தியது. வேகத்தில் மிரட்டிய ஷர்துல் தாகூர், 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் முதல் லீக் போட்டியில் இலங்கையிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது இந்தியா.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, முத்தரப்பு ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது அணியாக வங்கதேசம் கலந்து கொள்கிறது. முதல் சுற்று போட்டிகள் முடிவில்,மூன்று அணிகளும்தலா 1 வெற்றி பெற்றன. நேற்று நடந்த இரண்டாவது சுற்று லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மீண்டும் மோதின.

மழையால் தாமதம்: மோசமான வானிலை,ஈரமானமைதானம் காரணமாக,ஒரு மணி நேரம், 20 நிமிடங்கள் தாமதமாகதுவங்கியபோட்டி, தலா 19 ஓவர்களாக மாற்றப்பட்டது.‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரிஷாப் பன்ட்டுக்குப் பதில், லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார்.

சுந்தர் நம்பிக்கை: இலங்கை அணிக்கு குணதிலகா, குசல் மெண்டிஸ் ஜோடி,முதல் 7 பந்தில் 21 ரன்கள் எடுத்தது.உடனே,ஷர்துல் தாகூரை அழைத்தார் ரோகித் சர்மா. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. இவரது முதல் பந்தில் குணதிலகா (17), ரெய்னாவின் அசத்தலான ‘கேட்சில்’ அவுட்டானார்.

அடுத்து வந்த குசல் பெரேரா, சுந்தர் பந்தில் ‘ரிவர்ஸ் சுவீப்’ முறையில் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டார்.ஆனால், பந்து இவரது ‘கிளவுசில்’ பட்டு, ‘ஸ்டம்சை’ தகர்க்க, குசல் பெரேரா (3), போல்டான விரக்தியில் வெளியேறினார்.

ஷர்துல் அபாரம்: பின்,மெண்டிஸ், தரங்கா ஜோடி சேர்ந்தனர். சகால் வீசிய 8வது ஓவரில், 2 சிக்சர் உட்பட 17 ரன்கள் எடுக்கப்பட்டன. விஜய் ஷங்கரிடம்,தரங்கா (22)அவுட்டானார். ஷர்துல் ‘வேகத்தில்’திசரா பெரேரா (15), சுந்தர் ‘சுழலில்’ ஜீவன் மெண்டிஸ் (3) சரிந்தனர். அரைசதம் அடித்த குசல் மெண்டிஸ் (55), சகால் ‘வலையில்’ சிக்கினார்.

ஷர்துல் வீசிய கடைசி ஓவரில், ஷானகா (19), லக்மல் (4) அவுட்டாகினர். இலங்கை அணி 19 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் ஷர்துல் 4, சுந்தர் 2 விக்கெட் சாய்த்தனர்.

‘வேஸ்ட்’ ராகுல்: இந்திய அணிக்கு ரோகித், தவான் ஜோடி மீண்டும் சுமாரான துவக்கம் தந்தது. லக்மல் ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கிய ரோகித் (11), மறுபடியும் ஏமாற்றினார். தடுமாறிய தவான், 8 ரன்னுக்கு அவுட்டானார். சமீரா ஓவரில், வந்த வேகத்தில் 2 பவுண்டரி, 1 சிக்சர் என, விளாசினார் ரெய்னா. தொடர்ந்து பிரதீப் ஓவரில் பவுண்டரி, சிக்சர் அடித்த ரெய்னா (27) நிலைக்கவில்லை.

சபாஷ் மணிஷ்: நீண்ட இடைவேளைக்குப் பின் வாய்ப்பு பெற்ற லோகேஷ் ராகுல் (18), கிடைத்த வாய்ப்பை வீணடித்து, ‘ஹிட்’ விக்கெட் முறையில் வெளியேறினார். அடுத்து தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே இணைந்தனர். சூழ்நிலைக்கு ஏற்ப, இருவரும் ஒன்றும், இரண்டுமாக சேர்க்க, இந்திய அணி வெற்றியை நெருங்கியது.

பெரேரா பந்தில் மணிஷ் பாண்டே சிக்சர் அடித்து சற்று வேகம் காட்டினார்.

தன் பங்கிற்கு அவ்வப்போது பவுண்டரி அடித்தார் தினேஷ் கார்த்திக். கடைசியில் பிரதீப் ஓவரில், இவர், அடுத்தடுத்து இரு பவுண்டரி விளாச, இந்திய அணி 17.3 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் (39), மணிஷ் பாண்டே (42) அவுட்டாகாமல் இருந்தனர்.

பந்தா, ‘டவலா’

நேற்று 7வது ஓவரின் கடைசி பந்தை இலங்கையின் பிரதீப் வீசினார். அப்போது, இவரது பின்பக்க இடுப்பில் வைத்திருந்த சிறிய ‘டவல்’, வெளியே வந்தது. வலது கையில் பவுலிங் செய்த போது, இந்த டவலும் சேர்ந்து வர, மணிஷ் பாண்டே குழப்பிப் போனார்.

முதன் முறை

நேற்று 18 ரன் எடுத்த போது, ஜீவன் மெண்டிஸ் பந்தில் ‘ஹிட்’ விக்கெட் முறையில் அவுட்டானார் லோகேஷ் ராகுல். சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் இந்திய வீரர் இப்படி அவுட்டானது இதுதான் முதன் முறை.

11 வெற்றி

‘டுவென்டி–20’ அரங்கில், இலங்கை அணிக்கு எதிராக, இந்திய அணி (11) அதிக வெற்றிகளை பதிவு செய்தது. அடுத்து, ஆஸ்திரேலியா (10), தென் ஆப்ரிக்க (8) அணிகளுக்கு எதிராக அதிக போட்டிகளில் வென்றுள்ளது.

Advertisement
Cricket logo
United Arab Emirates - 177/10 (43)
Afghanistan - 178/5 (34.3)
Afghanistan won by 5 wkts
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
elumalai 7 days ago | Report abuse
மிக சிறப்பான ஆட்டம்


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
kannaiya srinivasan 7 days ago | Report abuse
வெற்றிகள் திக்கெட்டும் தொடரட்டும்...
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?