Advertisement


ஹாக்கி: இந்தியா ஆறுதல் வெற்றி

மார்ச் 10, 2018.
 Comments  
 


india hockey team
 

இபோ: அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிதொடரில் அயர்லாந்தை வென்ற இந்திய அணி, ஐந்தாவது இடம் பிடித்து ஆறுதல் அடைந்தது.

மலேசியாவின் இபோ நகரில், 27வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றன.லீக் சுற்றில் 1 வெற்றி, 1 ‘டிரா’, 3 தோல்வியுடன் 5வது இடம் பிடித்தது இந்திய அணி.

இதனால், பதக்க வாய்ப்பை இழந்த இந்திய அணி, 5–6 வது இடத்துக்கான போட்டியில் அயர்லாந்தை மீண்டும் சந்தித்தது. துவக்கத்தில் இருந்தே கோல் மழை பொழிந்தது இந்திய அணி. 5வது நிமிடம் கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பை, வருண் குமார் கோலாக மாற்றினார்.

28வது நிமிடம் லக்ரா ஒரு ‘பீல்டு’ கோல் அடிக்க, இந்தியா முதல் பாதியில் 2–0 என, முன்னிலை பெற்றது. அடுத்து 32 வது நிமிடம் மீண்டும் அசத்திய வருண் குமார் மற்றொரு கோல் அடித்தார். அடுத்து குர்ஜந்த் சிங் (37வது) தன் பங்கிற்கு உதவினார். அயர்லாந்து சார்பில் ஜூலியன் (48வது) மட்டும் ஒரு கோல் அடித்தார்.

முடிவில், இந்திய அணி 4–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 5வது இடம் பிடித்து, ஆறுதல் அடைந்தது.

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது ஒரு நாள் ஆட்டம்
இங்கிலாந்தில் இந்தியா, 3 ஓடிஐ தொடர்கள், 2018
7/17/2018 , 17:00
ஹெட்டிங்லேய், லீட்ஸ்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?