Advertisement


கரை சேர்க்க தோனி இல்லையே: முன்னாள் கேப்டன் கங்குலி ஆதங்கம்

மார்ச் 01, 2018.
 Comments  
 


Ganguly, Dhoni, 2003 World Cup Cricket
 

புதுடில்லி: ‘‘கடந்த 2003, உலக கோப்பை அணியில் தோனி இருந்திருக்க வேண்டும் என, விரும்பினேன்,’’ என, கங்குலி தெரிவித்தார்.

இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி, 45. முகமது அசாருக்குப் பின் வெற்றிகரமான, துணிச்சலான கேப்டன் என்று பெயர் பெற்றவர். இவர், ‘தி செஞ்சுரி இஸ் நாட் எனப்’ என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். இதில் பல்வேறு ருசிகரமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் தோனி குறித்து கங்குலி கூறியுள்ள தகவல்கள்:

கேப்டன் என்ற முறையில் அணியிலுள்ள சக வீரர்கள், நெருக்கடியான நேரங்களில், எப்படி சமாளித்து, சவாலை எதிர்கொள்கின்றனர் என்பதை தொடர்ந்து கண்காணிப்பேன். இவ்விஷயத்தில் சிறப்பாக செயல்படக் கூடியவர் தோனி. கடந்த 2003 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இவர் இடம் பெற வேண்டும் என விரும்பினேன்.

சரியான கணிப்பு 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பைனலின் போது, இதை சக வீரர்களிடம் தெரிவித்தேன். இவர் இருந்திருந்தால், போட்டியின் முடிவு மாறியிருக்கலாம். தோனி அப்போது, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கலெக்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இவர் குறித்து 2004ல் தான் எனக்கு தெரியவந்தது. இவரது திறமை, துவக்க நாளில் இருந்தே என்னை கவர்ந்தது. நாளுக்கு நாள் இது அதிகரித்தது.

இவரைப் பற்றிய எனது கணிப்பு, அடுத்தடுத்த ஆண்டுகளில் மிகச்சரியாக அமைந்தது, மகிழ்ச்சி தந்தது. பல்வேறு சாதனைகளை தகர்த்த தோனி, இப்போதும் அதேவேகத்துடன் செயல்படுவது, வியப்பாக உள்ளது.

திடீர் கோரிக்கை 

கடந்த 2008ல் எனது கடைசி டெஸ்ட். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் விளையாடினோம். இப்போட்டியின் ஐந்தாவது நாள் காலையில் என்னிடம் வந்த தோனி, ‘நீங்கள் கேப்டனாக செயல்படுங்கள்’ என, கோரிக்கை வைத்தார். இதை ஏற்க மறுத்து விட்டேன்.

கடைசியில் இந்திய வெற்றி பெறும் நிலையில் இருந்தது. இம்முறை மீண்டும் வந்த தோனி, மறுபடியும் அதே கோரிக்கையை வைத்தார். இம்முறை நான் மறுக்கவில்லை. ஏனெனில், இந்திய அணிக்கு கேப்டனாக களமிறங்கி எட்டு ஆண்டுகள் ஓடி இருந்தன.

உங்கள் வேலை

மீண்டும் அதே நாளில், ஆஸ்திரேலிய அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்த, எனது விருப்பப்படி பீல்டிங்கை மாற்றி அமைக்கவும், பவுலிங்கில் மாற்றங்களும் கொண்டு வந்தேன். இருப்பினும், அந்த நேரத்தில் எனது மனது அலை பாய்ந்தது. கேப்டன் பணியில், கவனம் செலுத்த முடியவில்லை. இதனால், மூன்று ஓவர்களுக்குப் பின், மீண்டும் அவரிடமே, கேப்டன் பொறுப்பை ஒப்படைத்து,‘ இது உங்கள் வேலை எம்.எஸ்.,’ என்று கூற, இருவரும் சிரித்தோம்.

இவ்வாறு தனது சுயசரிதையில் கங்குலி தெரிவித்துள்ளார்.

முதலும், முடிவும்

தோனி, கடந்த 2004ல் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். கேப்டனாக கங்குலி இருந்தார். இவரது திறமை பார்த்து வியந்த கங்குலி, பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியில், 3வது இடத்தில் களமிறக்கினார். இதில் 148 ரன்கள் குவித்தார் தோனி.

இதன் பின், தொடர்ந்து ஏறுமுகம் தான். ‘டுவென்டி–20’, ஒருநாள் அணியை தொடர்ந்து டெஸ்ட் அணிக்கும் கேப்டன் ஆனார் தோனி. கங்குலியின் கடைசி டெஸ்டில் (2008), இவர் தான் கேப்டனாக இருந்தார். சர்வதேச கிரிக்கெட்டில், வெகு விரைவில் கங்குலி ஓய்வு பெற்றதற்கு, தோனி தான் காரணம் என, ஒரு சிலர் கூறினர்.

ஆனால், 2003ல், தோனி அணியில் இடம் பெற வேண்டும் என, கங்குலி விரும்பியதாக தெரிவித்துள்ளது, அவர்களுக்கு இடையில் உள்ள நட்பை தெரிவித்துள்ளது.

Advertisement
Cricket logo
United Arab Emirates - 177/10 (43)
Afghanistan - 178/5 (34.3)
Afghanistan won by 5 wkts
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?