Advertisement


அன்கிதா ரெய்னாவுக்கு ‘நோ’ * சர்ச்சை கிளப்பும் சோம்தேவ்

பிப்ரவரி 27, 2018.
 Comments [1]  
 


Ankita Raina, Tokyo Games, Somdev Devvarman
 

புதுடில்லி: இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை அன்கிதா ரெய்னாவை, ஒலிம்பிக் திட்டத்தில் சேர்க்காமல் புறக்கணித்துள்ளார் சோம்தேவ் தேர்வர்மன். இவரது இந்த முடிவு புதிய சர்ச்சையை கிளம்பியுள்ளது.

இந்தியாவின் ‘நம்பர்–1’ டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இவருக்கு அடுத்து முன்னணி வீராங்கனையாக இருப்பவர் அன்கிதா ரெய்னா, 25. ஐ.டி.எப்., தொடரில் 5 ஒற்றையர், 10 இரட்டையர் பட்டம் வென்றவர். இருப்பினும், எதிர்கால ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் நட்சத்திரங்களுக்கான, சிறப்புத் தொகை (மாதம் ரூ. 50 ஆயிரம்) பெறுபவர்களுக்கான பட்டியலில், அன்கிதா (தரவரிசை 260) புறக்கணிக்கப்பட்டார்.

இவருக்குப் பதில், தரவரிசையில் பின்னணியில் உள்ள கர்மான் தண்டி (287 வது), பிரார்த்தனா தாம்ப்ரே (335) சேர்க்கப்பட்டனர். தேசிய டென்னிஸ் பார்வையாளராக உள்ள முன்னாள் வீரர் சோம்தேவ் தேவ்வர்மனின் இச்செயல், பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த மாதாந்திர உதவித் தொகை என்பது, ஒலிம்பிக் போட்டிக்கு மட்டுமல்ல, காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுக்கு தயாராகவும் தான் என்பதை, சோம்தேவ் மறந்து விட்டார் என, கூறப்படுகிறது.

இதனிடையே, சமீபத்தில் இந்தியாவில் நடந்த பெடரேஷன் டென்னிஸ் தொடரில், ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய அன்கிதா ரெய்னா அனைத்து போட்டிகளிலும் வெனறார். இதனால், அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் சார்பில், அன்கிதா மற்றும் இரட்டையரில் திவிஜ் சரணை, ஒலிம்பிக் உதவி தொகை பட்டியலில் சேர்க்குமாறு, மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் கோரிக்கை விடப்பட்டது.

பகைமை இல்லை

இதுகுறித்து சோம்தேவ் தேவ்வர்மன் கூறியது:

இந்திய டென்னிஸ் நட்சத்திரங்களில் யாருடனும், எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த பகை எண்ணமும் கிடையாது. கடுமையாக உழைத்து, மக்களின் வரி கட்டுகின்றனர். இந்தப் பணத்தை பயன்படுத்துபவர்களை தேர்வு செய்வதில் பொறுப்பாக செயல்பட வேண்டும் என்று நினைத்தேன்.

அன்கிதாவை தேர்வு செய்யாமல் விட்டதற்கு பெரிய காரணம் என்று எதுவும் இல்லை. கடந்த சில ஆண்டுகளில் இவரது வெற்றி, தோல்விகள், தரவரிசை பட்டியலை பார்த்தாலே தெரியும். இதுவரை இவர், ஒரு கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு கூட, தகுதி பெற்றது கிடையாது. இதற்கான தகுதியை இன்னும் அன்கிதா அடையவில்லை.

உலகின் சிறந்த 200 நட்சத்திரங்கள் இத்தொடரில் பங்கேற்பர். இந்த 200 பேரில் ஒருவராகக் கூட தகுதிபெற முடியாத ஒருவரை எப்படி, ஒலிம்பிக் திட்டத்தில் சேர்க்க முடியும். ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவில், முன்னணியில் உள்ள 50–60 நட்சத்திரங்கள் பங்கேற்பர். இதில் எப்படி அன்கிதா இடம் பெற முடியும் என்று நினைத்தேன். இது தான் எனது தேர்வுக் கொள்கையாக இருந்தது.

தேசம் முக்கியம்

இவ்விஷயத்தில் அன்கிதாவை மட்டுமல்ல, சர்வதேச அரங்கில் இவரை விட சிறப்பாக விளையாடிய பலரையும் தான் தேர்வு செய்யவில்லை. தனிப்பட்ட நட்சத்திரம் அல்லது ரேங்கிங் மட்டும் இங்கு முக்கியமல்ல. இந்தியாவுக்கு எப்படி வெற்றி தேடித் தருவார் என்பதைப் பொறுத்து தான் முடிவெடுக்கப்பட்டது.

இவ்வாறு சோம்தேவ் தேர்வர்மன் கூறினார்.

 

நீதி கிடைக்குமா

சானியாவுக்கு அடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர் அன்கிதா ரெய்னா. கடந்த 2017 சீசனில், நான்கு இரட்டையர் கோப்பை வென்றார். ஆசிய உள்ளரங்கு போட்டியில் ஒற்றையர் போட்டியில் வெ ள்ளி கைப்பற்றினார். கிராண்ட்ஸ்லாம் தொடரில் இவர் பங்கேற்றதே இல்லை என கூறப்படுகிறது.

அதேநேரம், இவருக்குப் பதில் தேர்வான கர்மான் தண்டி, ஐ.டி.எப்., தொடர் இரட்டையரில் 3 கோப்பை வென்றார். கிராண்ட்ஸ்லாம் அரங்கில் ஜூனியர் பிரிவில் பங்கேற்ற அனுபவம் மட்டுமே உள்ளது.

அன்கிதா கூறுகையில்,‘‘பெடரேஷன் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டேன். ஒலிம்பிக் திட்டத்தில் எதற்காக என்னை சேர்க்கவில்லை என தெரியவில்லை. கடவுள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். நீதி கிடைக்கும் என நம்புகிறேன்,’’என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Susil kumar 3 weeks ago | Report abuse
இறுதி சுற்று படம்தான் நியாபகம் வருகிறது
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?