Advertisement


‘ஆளப்போறான்’ தமிழன் * பஞ்சாப் அணிக்கு அஷ்வின் கேப்டன்

பிப்ரவரி 26, 2018.
 Comments [4]  
 


Kings XI Punjab have appointed R Ashwin as their new captain
 

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணி கேப்டனாக, தமிழகத்தின் அஷ்வின் நியமிக்கப்பட்டார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 11வது சீசன், வரும் ஏப்., 7ல் துவங்குகிறது. சூதாட்ட தடையில் இருந்து மீண்ட சென்னை, ராஜஸ்தான் அணிகள், இரு ஆண்டுக்குப் பின் மீண்டும் பங்கேற்கின்றன. மும்பையில் நடக்கும் முதல் போட்டியில், தோனியின் சென்னை அணி, ‘நடப்பு சாம்பியன்’ மும்பையை சந்திக்க உள்ளது.

இத்தொடருக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் பெங்களூருவில் நடந்தது. இதில், தமிழகத்தின் ‘நம்பர்–1’ வீரர், சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், மீண்டும் சென்னை அணியில் இடம் பெறுவார் என, நம்பப்பட்டது. ஆனால், அணி நிர்வாகம் இவரை வாங்க ஆர்வம் காட்டவில்லை.

இதையடுத்து, ரூ. 7.6 கோடிக்கு, பஞ்சாப் அணி, அஷ்வினை வாங்கியது. இந்த அணிக்கு, கடந்த சீசனில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், கேப்டனாக இருந்தார். இம்முறை அஷ்வின் கேப்டன் ஆகலாம் என, கூறப்பட்டது.

தற்போது, இதற்கான அறிவிப்பு வெளியானது. வரும் சீசனில், பஞ்சாப் அணி கேப்டனாக அஷ்வின் செயல்படவுள்ளார். பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் ஏப்.,8ல் டில்லியை எதிர்த்து விளையாட உள்ளது.

முதன் முறை

ஐ.பி.எல்., தொடரில் 2009 முதல் 2015 வரை என, 8 ஆண்டுகள் சென்னை அணிக்காக விளையாடினார் அஷ்வின். கடந்த இரு சீசனில், புதிதாக வந்த புனே அணிக்கு சென்றார். முதன் முறையாக வரும் தொடரில் கேப்டனாக செயல்பட உள்ளார்.

நெருக்கடி இல்லை

பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்படவுள்ள அஷ்வின் கூறியது:

கேப்டனாக தேர்வு செய்தது மிகவும் மகிழ்ச்சி. திறமை வாய்ந்த வீரர்களைக் கொண்ட பஞ்சாப் அணிக்கு தலைமை ஏற்று, சிறப்பாக செயல்படும் தகுதி எனக்கு உள்ளது, என, நம்புகிறேன். சக வீரர்களிடம் இருந்து, முடிந்தவரை முழுத் திறமைகளை வெளிக்கொண்டு வர முடியும் என்ற தன்னம்பிக்கை உள்ளது. உண்மையில் இது பெருமைப்படத்தக்க தருணம்.

எனது 21 வயதில், முதல் தர போட்டிகளில் தமிழக அணிக்காக, ஏற்கனவே கேப்டன் பணியில் சிறப்பாக செயல்பட்ட அனுபவங்கள் உள்ளன. தற்போது வந்துள்ள, புதிய சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன். மற்றபடி, எவ்வித கூடுதல் நெருக்கடியும் கிடையாது.

இவ்வாறு அஷ்வின் கூறினார்.

 

100

தமிழகத்தின் அஷ்வின், 2009ல் மும்பை அணிக்கு எதிராக, முதல் ஐ.பி.எல்., போட்டியில் விளையாடினார். சென்னை அணிக்காக 2009–2015ல் பங்கேற்ற 97 போட்டிகளில் 90 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கடந்த 2016ல் புனே அணிக்காக 14 போட்டியில் களமிறங்கி 10 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மொத்தம் 111 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சர்வதேச ‘டுவென்டி–20’ யை பொறுத்தவரை, 46 போட்டிகளில், 52 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

 

9

பஞ்சாப் அணிக்கும் கேப்டன் பொறுப்புக்கும் ஏழாம் பொருத்தம் தான். கடந்த 2008ல் நடந்த முதல் தொடரில் இந்தியாவின் யுவராஜ் சிங் கேப்டனாக இருந்தார். பின், 2009ல் சங்ககரா, 2010ல் ஜெயவர்தனா (இலங்கை), 2010–11ல் கில்கிறிஸ்ட், 2013ல் டேவிட் ஹசி, 2014–15ல் ஜார்ஜ் பெய்லி (ஆஸி.,), 2016ல் மில்லர் (தெ.ஆப்.,), 2017ல் மேக்ஸ்வெல் (ஆஸி.,) என, இதுவரை 10 சீசனில் 8 பேர் கேப்டனாக இருந்தனர்.

தற்போது 9வது கேப்டனாக, இந்தியாவின் அஷ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சிறப்பாக செயல்பட்டு, அணிக்கு பெருமை தேடித்தந்தால் நல்லது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
6   0  
deivasigamani marappa Gounder 3 weeks ago | Report abuse
தமிழன் ஒரு ஐ பி எல் அணிக்கு தலைமை தாங்க போகிறான். எத்துணை பேர் இதற்கு வாழ்த்து தெரிவிக்க போகிறார்கள் ?


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
4   0  
kannaiya srinivasan 3 weeks ago | Report abuse
நல்லதுதானே... அந்த காலத்திலேயே திரைகடலோடி திரவியம் தேடியவன் தமிழன்...


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
5   0  
Chandru 3 weeks ago | Report abuse
நாங்கள் உங்கள் பக்கம் உள்ளோம் அஷ்வின் தமிழக/சென்னை வீரர்கள் அல்லாத, CSK மேட்ச்களை பார்க்கப்போவதில்லை. தினேஷ் கார்த்திக், அஸ்வின், விஜயசங்கர், வாஷிங்டன் சுந்தர் இவர்கள் ஆடும் ஆட்டங்களையே பார்க்கப்போகிறோம். ஜடேஜா, ரைனா, கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், அம்பட்டி ராயுடு இவர்களுக்கு இடம் கொடுத்து, அஸ்வின், கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், அபராஜித் இவர்களுக்கு வாய்ப்பு தரமறுத்த சென்னை' அணியை என் அணி என எப்படி எடுத்துக்கொண்டு விசில் போடுவது?


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
3   0  


Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?