Advertisement


ஆப்கன் அணி அசத்தல்

பிப்ரவரி 14, 2018.
 Comments  
 


Rashid Khan
 

சார்ஜா: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ‘சுழலில்’ அசத்திய ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், 5 விக்கெட் கைப்பற்றினார்.

சார்ஜாவில், ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த ஜிம்பாப்வே அணிக்கு ஹாமில்டன் மசகட்சா (9), பிரண்டன் டெய்லர் (9) ஏமாற்றினர். கிரெய்க் எர்வின் (39), சிக்கந்தர் ராஜா (38) ஓரளவு ஆறுதல் தந்தனர். ரஷித் கான் ‘சுழலில்’ ரியான் பர்ல் (0), டென்டாய் சடாரா (11), பிரையன் விடோரி (15) சிக்கினர். ஜிம்பாப்வே அணி, 34.3 ஓவரில், 154 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ரஷித் கான், 5 விக்கெட் கைப்பற்றினார்.

சுலப இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணிக்கு முகமது ஷஜாத் (7) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய ரஹ்மத் ஷா (56), நாசிர் ஜமால் (51) கைகொடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணி, 27.3 ஓவரில், 4 விக்கெட்டுக்கு, 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முகமது நபி (18), நஜிபுல்லா ஜத்ரான் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஆப்கானிஸ்தான் அணி, 2–1 என முன்னிலை பெற்றது. நான்காவது போட்டி சார்ஜாவில் நாளை நடக்கவுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?