Advertisement


அமெரிக்கா ‘சதம்’: குளிர்கால ஒலிம்பிக்கில் ஆதிக்கம்

பிப்ரவரி 14, 2018.
 Comments  
 


Shaun White
 

பியாங்சங்க்: குளிர்கால ஒலிம்பிக் போட்டியின்‘ஸ்னோபோர்டு’ பனிச்சறுக்கு ‘ஹாப்பைப்’பிரிவில் ஷான் ஒயிட் தங்கம் வென்றார். இதன் மூலம், குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் அமெரிக்கா 100வது தங்கத்தை கைப்பற்றியது.

தென் கொரியாவில் உள்ள பியாங்சங்க் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் ஆண்களுக்கான‘ஸ்னோபோர்டு’ பனிச்சறுக்கு ‘ஹாப்பைப்’பிரிவில் அமெரிக்காவின் பெர்குசன், சுவிட்சர்லாந்தின் பாட்ரிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பைனலில் தனக்கு தரப்பட்ட மூன்று வாய்ப்பில் அமெரிக்க வீரர் ஷான் ஒயிட் துடிப்பாக செயல்பட்டார். அதிகபட்சமாக கடைசி வாய்ப்பில் 97.75 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். இதன் மூலம், குளிர்கால ஒலிம்பிக்கில் மூன்றாவது தங்கத்தை தட்டிச்சென்றார்.

4வது நட்சத்திரம்

இதற்கு முன், 2006 (டுரின், இத்தாலி,), 2010ம் (வான்கூவர், கனடா) ஆண்டில் நடந்த போட்டிகளில் ஏற்கனவே பதக்கத்தை வென்றிருந்தார். தவிர, ஒலிம்பிக் அரங்கில் மூன்று தங்கம் வென்ற முதல் ‘ஸ்னோபோர்டு’ வீரர் என்ற சாதனை படைத்தார். இது, அமெரிக்காவுக்கு ஒட்டுமொத்த குளிர்கால ஒலிம்பிக்கில் கிடைத்த 100வது தங்கமாக அமைந்தது.

இப்போட்டியில் வெள்ளி, வெண்கலம் முறையே ஜப்பானின் அயோமு, ஆஸ்திரேலியாவின் ஸ்கூட்டி ஜேம்ஸ் கைப்பற்றினர்.

ஜப்பான் வீரர் காயம்

ஜப்பானின் யூடோ டாட்சுகா இப்போட்டியில் கலந்து கொண்டார். அப்போது, அந்தரத்தில் தாவி திறமை வெளிப்படுத்தி கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக, கீழே வரும் போது தவறாக மேட்டின்பகுதியில் கால் பகுதியை வைத்துவிட்டார். இதனால், மேலிருந்து சரிந்த இவரின் இடுப்புப்பகுதியில் பலமான காயம் ஏற்பட்டது. ‘ஸ்டிரெச்சர்’ உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ‘ஸ்கேன்’ பரிசோதனை முடிவில், காயத்தின் தன்மை தெரியவரும்.

கொரியா முதல் கோல்

தென் கொரியா, வட கொரியா எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும், பெண்களுக்கான ஐஸ் ஹாக்கி போட்டியில் மட்டும் இணைந்து விளையாடுகின்றனர். கொரியா என்ற பெயரில் இரு அணி வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள கொரியா, முதலிரண்டு லீக் போட்டிகள் (எதிர்– சுவிட்சர்லாந்து, சுவீடன்) முறையே 0–8, 0–8 என வீழ்ந்திருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டியில் ஜப்பானை எதிர் கொண்டது. இதில், 30வது நிமிடத்தில் கொரியாவின் ஹிரிபின் கோல் அடித்தார். இதன் மூலம், இம்முறை கொரியா சார்பில் ஐஸ் ஹாக்கியில் முதல் கோல் அடிக்கப்பட்டது. ஜப்பான் அணி 4 கோல் அடித்தது. முடிவில், கொரியா 1–4 என வீழ்ந்தது. இதனால், காலிறுதி வாய்ப்பை தவறவிட்டது.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?