Advertisement


அன்னிய மண்ணில் அரசாட்சி: கோஹ்லி படை அத்தாட்சி

பிப்ரவரி 14, 2018.
 Comments [1]  
 


kohli
 

போர்ட் எலிசபெத்: தென் ஆப்ரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது இந்திய அணி. இதன் மூலம் அன்னிய மண்ணில் ஆதிக்கத்தை நிலைநாட்டியது. கேப்டன் கோஹ்லியின் துணிச்சலான முடிவுகள், மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப், சகாலின் சாகசம், ரோகித் சர்மாவின் சதம் போன்றவை  சரித்திர வெற்றிக்கு சான்றாக அமைந்தன.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி, 3–1 என, முன்னிலை வகித்திருந்தது. சமீபத்தில் போர்ட் எலிசபெத் நகரில் நடந்த, 5வது ஒருநாள் போட்டியில், முதலில் ‘பேட்டிங்’ செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா, 115 ரன்கள் எடுத்து கைகொடுக்க, 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு, குல்தீப் யாதவ் (4 விக்கெட்), சகால் (2), ஹர்திக் பாண்ட்யா (2) தொல்லை தர, 42.2 ஓவரில், 201 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்டாகி’, 73 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து இந்திய அணி (4–1), தென் ஆப்ரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

இந்த வெற்றிக்கு கேப்டன் கோஹ்லியின் துணிச்சலான முடிவுகள் முக்கிய காரணம். வேகத்துக்கு சாதகமான தென் ஆப்ரிக்க ஆடுகளங்களில் தொடர்ந்து ‘சுழல்’ வீரர்களான சகால், குல்தீப் யாதவை பயன்படுத்தினார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. பேட்டிங்கில் ரன் மழை பொழிந்து சிறந்த கேப்டனாக ஜொலித்தார்.

சிறந்த வெற்றி

இந்திய அணியின் வரலாற்று வெற்றி குறித்து  துணைக் கேப்டன் ரோகித் சர்மா கூறியது: தென் ஆப்ரிக்க மண்ணில், முதன்முறையாக ஒருநாள் தொடரை வென்றது மகிழ்ச்சி. இது, அன்னிய மண்ணில் விளையாடிய ஒருநாள் தொடர்களில் கிடைத்த மிகச் சிறந்த வெற்றியாக கருதுகிறேன். இதற்கு முன், 2007–08 ல் ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் கோப்பை வென்றிருந்தோம். இருப்பினும் இம்முறை இரு அணிகள் மட்டும் பங்கேற்கும் தொடரை (‘பைலேட்ரல் சீரிஸ்’) கைப்பற்றி உள்ளோம்.

தென் ஆப்ரிக்க மண்ணில் கிரிக்கெட் விளையாடுவது எளிதல்ல. வெற்றி பெற கடுமையாக போராட வேண்டும். இருப்பினும் இங்கு தொடரை கைப்பற்றி இருப்பது, அணியில் உள்ள ஒட்டுமொத்த வீரர்களின் சிறப்பான செயல்பாட்டிற்கு கிடைத்த பரிசாக கருதுகிறேன். ஒவ்வொரு வீரரும், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினர். இந்த வெற்றி, அடுத்து அன்னிய மண்ணில் விளையாட உள்ள தொடர்களில் சாதிக்க உதவும் என நம்புகிறேன். சமீபத்தில் முடிந்த டெஸ்ட் தொடரை (1–2), மோசமாக இழக்கவில்லை. சற்று முயற்சித்திருந்தால் தொடரை கைப்பற்றி இருக்கலாம். இருப்பினும் தற்போது ஒருநாள் தொடரை கைப்பற்றியது பெருமையாக கருதுகிறேன். இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

ரபாடாவுக்கு அபராதம்

ஐந்தாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்காவின் ரபாடா வீசிய 8 வது ஓவரின், 2வது பந்தில், இந்தியாவன் ஷிகர் தவான் (34) அவுட்டானார். அப்போது விக்கெட் வீழ்த்திய உற்சாகத்தில் இருந்த ரபாடா, தவானை நோக்கி ‘வெளியே போ’ என, சைகை காண்பித்தார். இப்படி எதிரணி வீரரை கேலி செய்வது ஐ.சி.சி., விதிமுறைப்படி குற்றம். இதனையடுத்து, ‘மேட்ச் ரெப்ரி’ ஆன்டி பைகிராப்ட், ரபாடாவுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் மற்றும் ஒரு ஒழுங்கீன புள்ளி வழங்கினார். இதுவரை 5 ஒழுங்கீன புள்ளி பெற்றுள்ள ரபாடா, 24 மாதங்களுக்குள், 8 அல்லது அதற்கு மேல் ஒழுங்கீன புள்ளி பெற்றால், போட்டியில் விளையாட தடைவிதிக்கப்படும்.

இது இலக்கு

இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி கூறுகையில், ‘‘தென் ஆப்ரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றியதற்கு, ஒட்டுமொத்த வீரர்களின் செயல்பாடு முக்கிய காரணம். கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று, 5–1 என, கோப்பை வெல்வதே இலக்கு. கடந்த 5 போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்கு, கடைசி போட்டியில் (பிப். 16) வாய்ப்பு வழங்கப்படும்,’’ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Saamaanyar 22 hours ago | Report abuse
வரலாற்றில் இடம்பெறுவார் வீரர் கோஹ்லி..




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?