Advertisement


வரமாக வந்த இருவர் சாதிக்கும் சகால், குல்தீப்

பிப்ரவரி 14, 2018.
 Comments  
 


kuldeep, chahal
 

போர்ட் எலிசபெத்: சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப், சகால் இருவரும் இந்திய அணிக்கு வரமாக வந்துள்ளனர். இவர்களின் கலக்கல் ஆட்டம் கைகொடுக்க, தென் ஆப்ரிக்க ஒரு நாள் தொடரில் முதல் முறையாக சாதிக்க முடிந்தது.

இந்திய ‘சீனியர்’ சுழற்பந்துவீச்சாளர்களான அஷ்வின், ஜடேஜா ஒரு நாள், ‘டுவென்டி–20’ போட்டியில் தடுமாறி வந்தனர். இந்த நேரத்தில், துணிச்சலாக முடிவு எடுத்தார் கேப்டன் கோஹ்லி. இவர்களுக்குப்பதில், இளம் வீரர்களான குல்தீப், சகாலுக்கு வாய்ப்பு தந்தார். தென் ஆப்ரிக்க மண் புதிது என்பதால், இருவரின் செயல்பாடு பற்றி அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கேற்ப, மணிக்கட்டில் மாய ஜாலம் காட்டுகின்றனர். மில்லர், குயின்டன் உள்ளிட்ட வீரர்களை ‘சுழல் வலையில்’ வீழ்த்தினர். செஞ்சூரியனில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் அசத்திய சகால், ஒரு நாள் அரங்கில் முதல் முறையாக 5 விக்கெட் சாய்த்தார். இவருடன் குல்தீப்பும் இணைய, இந்திய அணி தென் ஆப்ரிக்க மண்ணில் ஒரு நாள் தொடரை முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது. தற்போது, இந்த இருவரும் இந்திய அணியின் வரமாக மாறிவிட்டனர்.

சாதனை விவரம்:

30

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இதுவரை நடந்துள்ள 5 ஒருநாள் போட்டிகளில் சகால் (14 விக்.,), குல்தீப் (16) இணைந்து 30 விக்கெட் வீழ்த்தினர். இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரில், இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அதிக விக்கெட் (30) வீழ்த்தியது இதுதான் முதல் முறை. 

9

இந்திய அணி கடந்த ஜூன் 2016ல் ஜிம்பாப்வே மண்ணில் நடந்த ஒரு நாள் தொடரை 3–0 என வென்றது. இதன்பின், நியூசிலாந்து (3–2), இங்கிலாந்து (2–1), வெஸ்ட் இண்டீஸ் (3–1), இலங்கை (5–0), ஆஸ்திரேலியா (4–1), நியூசிலாந்து (2–1), இலங்கை (2–1), தென் ஆப்ரிக்கா (4–1) என அடுத்தடுத்து 9 தொடரை கைப்பற்றியது. இதன் மூலம், ஒரு நாள் அரங்கில் தொடர்ந்து அதிக தொடர்களில் வாகை சூடிய இரண்டாவது அணி என்ற பெருமை பெற்றது. முதலிடத்தில், வெஸ்ட் இண்டீஸ் (நவ.1980– மார்ச் 1988, 14 தொடர்) உள்ளது.

16

இதுவரை நடந்த 5 ஒரு நாள் போட்டியில் குல்தீப் 16 விக்கெட் சாய்த்துள்ளார். இதன் மூலம், தென் ஆப்ரிக்க மண்ணில் எந்தவொரு தொடரிலும் அதிக விக்கெட் வீழ்த்திய ‘சுழல்’ வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன், இலங்கையின் முரளிதரன் 14 விக்கெட் சாய்த்ததே (1998, முத்தரப்பு தொடர் ) அதிகமாக இருந்தது. 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?