Advertisement


இந்திய பெண்கள் அசத்தல் வெற்றி

பிப்ரவரி 13, 2018.
 Comments  
 


india womens cricket team
 

போட்செப்ஸ்டிரூம்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது ‘டுவென்டி–20’ போட்டியில், மிதாலி ராஜ் அரைசதம் கடந்து கைகொடுக்க, இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி போட்செப்ஸ்டிரூமில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

முதலில் ‘பேட்டிங்’ செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு லிஜெல்லி லீ (19) சுமாரான துவக்கம் தந்தார். கேப்டன் டேன் வான் நிகெர்க் (38), மிக்னன் டு பிரீஸ் (31) ஆறுதல் தந்தனர். நடின் டி கிலெர்க் (23*), சோல் டிரையான் (32*) கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு, 164 ரன்கள் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு மந்தனா (28) நல்ல துவக்கம் தந்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (0) ஏமாற்றினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் (37) நம்பிக்கை தந்தார். அபாரமாக ஆடிய மிதாலி ராஜ், அரைசதம் கடந்தார். இவருக்கு வேதா கிருஷ்ணமூர்த்தி ஒத்துழைப்பு தர, இந்திய அணி, 18.5 ஓவரில், 3 விக்கெட்டுக்கு, 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிதாலி (54), வேதா (37) அவுட்டாகாமல் இருந்தனர். இதனையடுத்து இந்திய அணி, 1–0 என, முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி, ஈஸ்ட் லண்டனில், வரும் 16ல் நடக்கவுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?