Advertisement


வரலாறு படைக்குமா வலுவான இந்தியா: தென் ஆப்ரிக்காவுடன் 5வது சவால்

பிப்ரவரி 12, 2018.
 Comments [2]  
 


India, South Africa, 5th One Day Cricket
 

போர்ட் எலிசபெத்: ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதில், இந்திய அணி வென்றால், தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக தொடரை வென்று வரலாறு படைக்கலாம்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் அஞ்சாமல் ஆடிய இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது. மழையால் பாதிக்கப்பட்ட நான்காவது போட்டியில் 5 விக்கெட்டில் தோற்ற போதும், 3–1 என, தொடரில் முன்னிலையில் உள்ளது. இன்று இரு அணிகள் மோதும் அஞ்சாவது போட்டி, போர்ட் எலிசபெத்தில் நடக்கிறது. 

‘மிடில்’ மோசம்: பேட்டிங்கில் துவக்க வீரர் ரோகித் சர்மாவின் சொதப்பல் தொடர்கிறது. கடந்த 4 போட்டியில் 40 ரன்கள் மட்டும் எடுத்துள்ளார். கடந்த போட்டியில் சதம் கடந்த ஷிகர் தவான் (271), கோஹ்லி (393) இணைந்து, ‘டாப் ஆர்டரில்’ கைகொடுப்பதால் தான் இந்திய அணி கவுரமான ஸ்கோரை எட்டுகிறது. 

நான்காவது இடத்தில் களமிறங்கும் ரகானே, முதலில் 79 ரன்கள் எடுத்தார். இதன் பின் 11, 8 என, ஏமாற்றுகிறார். பாண்ட்யாவும் தொடர்ந்து கைவிடுகிறார். ஒருநாள் தொடரில் மொத்தம் 26 ரன்கள் தான் எடுத்துள்ளார். 

கோஹ்லி, தவான் தவிர, மற்றவீரர்கள் அனைவரும் இணைந்து, 239 ரன்கள் மட்டும் எடுத்தது, ‘மிடில் ஆர்டர்’ பலவீனத்தை காட்டுகிறது. கடந்த போட்டியில் மந்தமாக ஆடிய தோனி, இன்று அதிவிரைவாக ரன் சேர்க்க முயற்சிக்க வேண்டும்.

 பவுலிங் குழப்பம்: பவுலிங்கை பொறுத்தவரையில் ‘வேகத்தில்’ புவனேஷ்வர், பும்ரா மிரட்டுகின்றனர். கடந்த போட்டியில் மட்டும் ‘சுழலில்’  குல்தீப்,  சகால் ஏமாற்றினர். சகால் வீசிய ‘நோ–பால்’ தவறு மீண்டும் நடக்காது என நம்புவோம். கேதர் ஜாதவ் காயம் அடைந்தது, ஐந்தாவது பவுலருக்கான இடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாண்ட்யா (1 விக்.,) சொல்லிக் கொள்ளும் படி இல்லை.

மழை செய்த பிழை: நான்காவது போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் தென் ஆப்ரிக்க அணி உள்ளது. கேப்டன் மார்க்ரம், ஆம்லா, டுமினி, பெரிய எதிர்பார்ப்புடன் வந்த டிவிலியர்ஸ் ஏமாற்றிய போதும், விக்கெட் கீப்பர் கிளாசன், மில்லர் இணைந்து, இந்திய பவுலர்களை ஒரு வழி செய்து விட்டனர். மழையும் தென் ஆப்ரிக்க அணிக்கு சாதகமாகி விட்டது எனலாம்.

வேகப்பந்துவீச்சில் மார்கல், ரபாடா சாதிக்கலாம். இம்ரான் தாகிர் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. 

கடந்த முறை பவுலிங், பீல்டிங்கில் இந்திய அணி வீரர்கள் சொதப்பினர். இம்முறை சுதாரித்து செயல்பட்டால், தொடரை கைப்பற்றலாம்.

வெற்றி இல்லை

போர்ட்எலிசபெத் மைதானம் இந்தியாவுக்கு ராசியில்லாதது.  இங்கு விளையாடிய 5 போட்டிகளில், தென் ஆப்ரிக்காவிடம் 4, கென்யாவிடம் 1 (2001 ல்) என, அனைத்து போட்டிகளிலும் தோற்றது.

தென் ஆப்ரிக்க அணி இங்கு விளையாடிய 32 போட்டிகளில், 11ல் தோற்றுள்ளது.

179 ரன்

இந்திய அணியின் பேட்டிங்கும் இங்கு சொல்லிக் கொள்ளும் படி கிடையாது. கடந்த 1997ல் இங்கு, தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக, 179/9 ரன்கள் எடுத்தது தான் அதிகம். மற்றபடி, 142/10 (1992), 176/10 (2001, எதிர்–கென்யா), 163/10 (2006), 142/6  (2011) என, குறைந்த ரன்கள் தான் எடுத்தது.

சுழலுக்கு சாதகம்

போர்ட் எலிசபெத்தின் செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தின் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும். தென் ஆப்ரிக்காவின் இம்ரான் தாகிர், ஷம்சி, பங்கிசோ என, பலருக்கும் இது கைகொடுத்தது. இதனால், இன்று இரு அணியிலும் கூடுதல் சுழற்பந்துவீச்சாளர்கள் இடம் பெறலாம்.

மழை வருமா

போர்ட் எலிசபெத்தில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். இரவில் மழை வர, அதிகபட்சம் 22 சதவீதம் தான் வாய்ப்புள்ளது என்பதால், போட்டி முழுமையாக நடக்கும்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Arumugam 2 weeks ago | Report abuse
இன்று இந்தியா வெற்றி பெரும்


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Amanullah 2 weeks ago | Report abuse
இந்திய அணி வலுவாகத்தான் இருக்கிறது. ஆனால் போர்ட் எலிசபெத்தில் இதுவரை இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே தோற்றுள்ளது தகவல் வயிற்றில் புளியைக் கரைக்கிறதே
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?