Advertisement


டெய்லர் சதம்: ஜிம்பாப்வே வெற்றி

பிப்ரவரி 12, 2018.
 Comments  
 


Zimbabwe, Afghanistan, One Day Cricket, Brendan Taylor
 

சார்ஜா: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பிரண்டன் டெய்லர் சதம் கடந்து கைகொடுக்க, ஜிம்பாப்வே அணி, 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சார்ஜாவில், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த ஜிம்பாப்வே அணிக்கு ஹாமில்டன் மசகட்சா (48) நல்ல துவக்கம் தந்தார். அபாரமாக ஆடிய பிரண்டன் டெய்லர் (125), சிக்கந்தர் ராஜா (92) கைகொடுத்தனர். ஜிம்பாப்வே அணி, 50 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 333 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணிக்கு முகமது ஷாஜத் (15) ஏமாற்றினார். ரஹ்மத் ஷா (43) ஆறுதல் தந்தார். கேப்டன் ஆஸ்ஹார் ஸ்டானிக்ஜாய் (1), நசிர் ஜமால் (0), நஜிபுல்லா ஜத்ரன் (3) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். முகமது நபி (31), ஓரளவு கைகொடுத்தார். மற்றவர்கள் ஏமாற்ற, ஆப்கானிஸ்தான் அணி, 30.1 ஓவரில், 179 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. ஜிம்பாப்வே சார்பில் கிரீமர், 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருதை ஜிம்பாப்வே வீரர் பிரண்டன் டெய்லர் வென்றார்.

இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1–1 என, சமநிலை பெற்றது. மூன்றாவது போட்டி சார்ஜாவில் பிப். 13ல் நடக்கவுள்ளது.

அதே ஸ்கோர்... அதே வெற்றி

இதன்மூலம் ஜிம்பாப்வே அணி, சரியான பதிலடி தந்தது. ஏனெனில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 333 ரன்கள் குவித்தது. அப்போது ஜிம்பாப்வே அணி, 34.4 ஓவரில், 179 ரன்னுக்கு சுருண்டு, 154 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. என்ன ஒரு ஒற்றுமை!

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?